Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுழன்றடித்த சூறைக்காற்று.. திடீரென பறந்த அரசு பஸ்சின் மேற்கூரை.. பதறி அலறிய மக்கள்! ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று சுழன்றடித்த காற்றால் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்தது. அப்போது பொதுமக்கள் பதறிப்போய் அலறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வாட்டி வதைத்த கத்தரி வெயில் காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனால் வெப்பத்தின் கோரப்பிடியில் சிக்கிய மக்கள் கொஞ்சம் நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில் தான் அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரை சென்னை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பெய்து வருகிறது.

Chennai Corporation Government bus roof blown off due to wind in Thiruvallur

அதன்படி இன்று மாலை சென்னையில் வானிலை சட்டென மாறியது. பலத்த காற்றுடன் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் நன்றாக மழை பெய்தது. அதேபோல் சென்னையை சுற்றிய சில இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. முன்னதாக சில இடங்களில் காற்று சுழன்று சுழன்று அடித்தது. இதனால் புழுதிகள் கிளம்பி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின.

இதற்கிடையே தான் பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்னை மாநகர அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சுழன்று வீசிய சூறைக்காற்றுக்கு பஸ்சின் மேற்கூரை தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் திடீரென பஸ்சின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் பெயர்ந்து மேல்நோக்கி பறந்தது. இதனை பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

Chennai Corporation Government bus roof blown off due to wind in Thiruvallur

இதனால் அவர்கள் அனைவரும் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் கூச்சலிட்டனர். இதையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். அவசரஅவசரமாக பயணிகள் கீழே இறங்கினர். அதன்பிறகு வேறு பஸ்சில் பயணிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சென்னை மற்றும் அதனை புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேர வானிலை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என இன்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+