தேவிப்பிரியாவை தானே திருத்தலாம் என தந்தையிடம் கூட சொல்லாத பானுமதி!.. மகள் கையாலேயே கொலையுண்ட சோகம்!
Recommended Video

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெற்ற தாயை கொன்ற மகளின் காதல் விவகாரம் குறித்து இதுநாள் வரை அந்த தாய், தனது கணவனிடம் சொல்லாமல் ணறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8-ஆவது தெருவை சேர்ந்தவர் திருமுருகநாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி (50). இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களது 2-ஆவது மகள் தேவிப்பிரியா (19), பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே இவருக்கும் ஆந்திர மாநிலம் தடா பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

ஊர் சுற்றிய காதலர்கள்
இதில் இருவரும் காதலித்து வந்தனர். சுரேஷ் செங்குன்றம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பணிக்காக மின்சார ரயில் மூலம் சென்னைக்கு வரும்போதெல்லாம் தேவிப்பிரியாவை சந்தித்து வந்துள்ளார். மேலும் கல்லூரிக்கு செல்லாமல் சுரேஷுடன் ஊர் சுற்றியுள்ளார். இந்த விவகாரம் தாய் பானுமதிக்கு தெரிந்துள்ளது.

உதவி
இதனால் தேவிப்பிரியாவை கண்டித்துள்ளார். இதனிடையே தேவிப்பிரியாவும் சுரேஷும் பேஸ்புக் பழகிய தஞ்சாவூரைச் சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரிடம் காதலுக்கு உதவி கேட்டனர். அவர்களும உதவுவதாக தெரிவித்தனர்.

தப்பி ஓட முயற்சி
இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி தேவிப்பிரியாவும் சுரேஷும் முன் கூட்டியே திட்டமிட்டனர். அதன்படி நேற்று முன் தினம் மாலை பேஸ்புக் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்தார். அப்போது பானுமதியை தேவிப்பிரியா, விக்னேஷ், அஜித் குமார் ஆகியோர் குத்தி கொன்றனர். இதையடுத்து தப்பி ஓட முயன்ற அஜித்குமாரையும், விக்னேஷையும் பொதுமக்கள் பிடித்து விட்டனர். இதனால் தேவிப்பிரியாவும் மாட்டிக் கொண்டார்.

திட்டமிட்டோம்
அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில் நான் சுரேஷை காதலித்தது என் தாய் பானுமதிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை தீர்த்து கட்டி விடலாம் என முடிவு செய்து திட்டம் தீட்டினோம். இதற்காக பேஸ்புக் நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமாரை ஏற்பாடு செய்தோம். எங்கள் திட்டப்படி வீட்டில் அவர்கள் இருவரும் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் போது எப்படியும் தாய் தடுப்பார். அப்போது அவரை கொன்றுவிடுவது என திட்டமிட்டோம்.

மூவரும் கொன்றோம்
அது போல் நேற்று முன் தினம் எங்கள் வீட்டில் நான், என் அக்காள், அம்ம மூவரும் மட்டும் இருந்தோம். நான் நைஸாக பேஸ்புக் நண்பர்களை வீட்டுக்குள் அழைத்தேன். அப்போது அவர்களை நகைகளை திருடுவது போல் நடிக்க செய்தேன். அதை பார்த்து விட்டு நான் கூச்சலிடுவதுப போல் நடித்தேன். உடனே அம்மா உள்ளே வந்தார். அவரை மூவரும் சேர்ந்து கொன்றோம் என்றார்.

காதலன் கைது
இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர். நேற்று அதிகாலை தடா பகுதியில் பதுங்கி இருந்த சுரேஷை போலீஸார் கைது செய்தனர். தனது கண்டிப்பு மூலம் மகளை திருத்திக் கொள்ளலாம் என்று நினைத்த பானுமதி இந்த விவகாரத்தை தந்தை திருமுருகனிடம் கூட சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். பானுமதி கொல்லப்பட்டதை அடுத்தே மகளின் விவகாரம் திருமுருகனுக்கு தெரியவந்தது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications