கவுன்சிலர் கனவில் மத்திய அரசுப் பணிக்கு விருப்ப ஓய்வு! அரசியல் ஆசையில் திமுக வேட்பாளரின் பலப்பரீட்சை!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் மத்திய அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு திமுக சார்பில் கவுன்சிலர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் ஒருவர்.
நிரந்தரமாக மாத வருமானம் அளித்துக்கொண்டிருந்த மத்திய அரசுப் பணியை துறந்துவிட்டு அரசியல் பலப்பரீட்சையில் இறங்கியிருக்கிறார் அவர்.
இதனால் தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள அவர் திருவேற்காடு 8-வது வார்டில் பம்பரமாக சுழன்று வருகிறார்.

உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் மூர்த்தி, தனது மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார். அரசுப் பணி கிடைக்காதா என லட்சக்கணக்கானோர் ஏங்கி வரும் சூழலில், கிடைத்த அரசுப் பணியை அரசியலுக்காக உதறியிருக்கிறார் அவர்.

வேட்புமனுத் தாக்கல்
திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த மூர்த்தி, 8-வது வார்டு மக்கள் தன்னை நிச்சயம் வெற்றிபெற வைப்பார்கள் என மிகுந்த நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். திருவேற்காடு நகராட்சியில் திமுக அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில் மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டுள்ள மூர்த்தி நகர்மன்ற தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல இடங்களில்
திருவேற்காட்டில் திமுக வேட்பாளராக மூர்த்தி களமிறங்கியிருப்பதை போல் தமிழகத்தின் பல இடங்களில் இதேபோன்று பலரும் தங்கள் பணிகளை உதறிவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். குன்னூரில் சாஃப்ட்வேர் இன்ஞ்சினியராக பணியாற்றிய இளைஞர் ஒருவர் இதே பாணியில் தமது வேலையை துறந்துவிட்டு அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு நிற்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நகராட்சி
திருவேற்காட்டை பொறுத்தவரை தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாகும். திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் இந்த நகராட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு குறைவிருக்காது. இதனால் நகர்மன்ற தலைவர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications