ஆ..ஊன்னா வருமான வரித்துறையை ஏவுவதா? பிபிசி மீதான நடவடிக்கைக்கு தி.க. கடும் கண்டனம்
பிபிசி அலுவலகத்தில் வருமான வரி ஆய்வுக்கு தி.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர்: பிபிசி ஊடகம் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்கு திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது: மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி, இன்றைக்குப் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாவற்றையுமே தம்முடையதாகக் கையகப்படுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கு அடையாளம் - யார் யாரெல்லாம் உண்மைகளைச் சொல்லுகிறார் களோ அல்லது தங்களுக்கு எதிரான மாறுபட்ட கருத்துகளைச் சொல்லுகிறார்களோ அவர்களுடைய பேச்சு, எழுத்து சுதந்திரத்தைப் பறித்து, குரல் வளையை நெரிக்க வேண்டும் என்ற அளவிலேதான் இதை பிபிசி மீதான நடவடிக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும். பி.பி.சி., குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தைப்பற்றி ஆவணப் படமாக வெளி யிட்டது என்று சொன்னால், அதை மறுத்து இவர்கள், அவர்கள்மீது வழக்குப் போடலாம்; அல்லது அது உண்மையில்லை என்பதற்கு இவர்கள் தரப்பில் விளக்கம் சொல்லலாம்.

ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு, பி.பி.சி. நிறுவனத்தின்மீது வருமான வரித் துறையை ஏவி விடுகிறார்கள். இது அவர்களின் பலகீனத்தைத்தான் காட்டுகிறது. எதிர்க்கட்சிகளின்மீது வருமான வரித் துறையை ஏவிவிடுவது, அவர்களுடைய கருத்து களுக்கு யார் மாறுபடுகிறார்களோ அவர்களின் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் பறிமுதல் போன்றவை இருந்தால், இவை அத்தனைக்கும் பதில் சொல்லவேண்டிய காலம்தான் 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். இதற்கு சரியான பதிலை மக்கள் அளிப்பார்கள்.
நீண்ட காலமாக, நாடாளுமன்றம் கையகப் படுத்தப்படுத்தப்பட்டு விட்டது. போதுமான அளவிற்கு, தெளிவாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை. சட்டமன்றங்களிலும் அப்படிப்பட்ட சூழல்கள்தான் இருக்கின்றன; பத்திரிகை உலக மும் அப்படி இருக்கிறது. இன்னுங்கேட்டால், இனிமேல் வரக்கூடிய ஓர் ஆட்சி - ஒன்றியத்தில் அமைந்தால், வரு மான வரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.அய். போன்றவை சுதந்திரமாக, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கக்கூடிய ஒரு திட்டத்தை அறிவிக்கவேண்டும் - அரசியல் கட்சிகள் இணைந்து இதற்கொரு முடிவு காணவேண்டும். இப்படி கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந் திரம் இல்லாதவர்கள் - நேரிடையாக சந்திக்க முடியாதவர்கள் - இந்த ஆயுதங்களை ஏவி விடு கிறார்கள் - இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள்.

ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு, சில கட்சிகள் காணா மல் போகும்; சில கட்சிகளை அடமானம் வைத்தவர்கள், அதை மீட்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உணர் வார்கள். ஈரோடு ஒரு திருப்பமாக இருக்கும். எப்பொழுதுமே ஈரோடு திருப்பத்தை உரு வாக்கக் கூடிய தத்துவம் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications