திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: மாற்று பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அவை மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் இதை தெரிந்து கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.
சென்னை துறைமுகத்திலிருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத் துறையினர் போராடி வருகிறார்கள்.

சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதிக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய் இருப்போர் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தீவிபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதால் 8 அதி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்டு மாற்று பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
1. காலை 5.50 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (ரயில் எண் 20607)
2. காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் (ரயில் எண் 12007)
3. காலை 6.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் கோவை விரைவு ரயில் (ரயில் எண் 12675)
4.காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் (ரயில் எண் 12243)
5. காலை 6.25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் (ரயில் எண் 16057)
6. காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் டபுல்டெக்கர் விரைவு ரயில் (ரயில் எண் 22625)
7. காலை 7.40 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் பிருந்தாவன் விரைவு ரயில் (ரயில் எண் 12639)
8. காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள நாகர்சோல் செல்லும் விரைவு ரயில் (ரயில் எண் 16003)
இந்த ரயில்கள் எல்லாம் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications