ஓவர் சந்தேகம்.. லுங்கியால் மனைவியை இறுக்கி கொன்ற கணவன்.. மரத்தில் தானும் தற்கொலை!
மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
திருவள்ளூர்: வலி தாங்க முடியாமல் அலறி அடித்து ஓடிய மனைவியை விரட்டி சென்ற கணவன்.. லுங்கியை கழற்றி மனைவியின் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு, மரத்தில் தூக்கு போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்!
பூந்தமல்லி அருகே பாப்பான் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. அங்குள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான தோட்டத்தை கவனித்து கொள்கிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
ரேவதியும் கணவனுடன் தோட்டத்திலேயே தங்கி உள்ளார். தினமும் இரவு நேரத்தில் மகன்களை வந்து பார்த்துவிட்டு போவாராம் ரேவதி. ஆனால், நேற்றிரவு ரேவதி வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த மகன்கள், நேரடியாக தோட்டத்துக்கே சென்று பார்த்தனர்.

மாரிமுத்து
அங்கு உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்ட நிலையில், லுங்கியால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு இருந்தார். பக்கத்திலேயே அப்பா மாரிமுத்துவும் மரத்தில் தூக்கு போட்டு சடலமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்டு அலறிய மகன்கள் இருவரும், நசரத்பேட்டை போலீசாரிடம் புகார் தந்தனர்.

ரேவதி
இது சம்பந்தமாக நடந்த விசாரணையில், கணவன் - மனைவிக்குள் சந்தேகம் காரணமாகவே இந்த கொலை, தற்கொலை நடந்துள்ளதாக தெரிகிறது. 54 வயது ரேவதி மீது ஏராளமான சந்தேகம் உடையவராம் 60 வயது மாரிமுத்து. அடிக்கடி இதனால் சண்டை வந்துள்ளது. நேற்றும்கூட இப்படி நடத்தை குறித்து சந்தேகம் எழுந்ததால், மாரிமுத்து, ரேவதியை அடித்துள்ளார்.

லுங்கி
இதில் வலி தாங்க முடியாமல் ரேவதி, அலறி அடித்து கொண்டு தோட்டத்துக்குள் ஓடியுள்ளார். ஆனால் பின்னாடியே துரத்தி கொண்டு போன மாரிமுத்து, அணிந்திருந்த லுங்கியை கழட்டி ரேவதியின் கழுத்தை நெரித்து இறுக்கினார்.

தற்கொலை
இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து பதறிய மாரிமுத்து என்ன செய்வதென்றே தெரியாமல், அங்கிருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரங்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து தொடர் விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications