Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவரை இழந்த பெண்.. ஏகப்பட்ட அபார்ஷன்.. லாரி டிரைவர்கள் வேற, பாத்ரூமில் அக்கிரமம்.. திணறிய திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் கைதானார்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: கணவன் இறந்து 4 வருடங்கள் ஆனநிலையில், பலமுறை கர்ப்பம் அடைந்துள்ளார் சாய்ரா பானு.. இவர் செய்த உச்சக்கட்ட கொடுமைதான் தற்போது மக்களை உலுக்கி எடுத்தி எடுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அத்திப்பேடு பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை பக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது.

இந்த மருத்துவமனையில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் கடந்த 3-ம் தேதி மாலை 6 மணிக்கு நடந்தது.. அங்கிருந்த ஒரு பாத்ரூமுக்குள், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இறந்து கிடந்ததை அந்த மருத்துவமனை ஊழியர்கள் கண்டு அதிர்ந்தனர்..

பாத்ரூம்

பாத்ரூம்

இதனால் உடனடியாக இதுபற்றி சோழவரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.. போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெண் சிசுவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... அதற்கு பிறகு, சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணையை ஆரம்பித்தனர்.. அந்த மருத்துவமனையின் டாக்டர்கள், ஊழியர்களிடம் முதலில் விசாரித்தனர்.

 பச்சிளம் குழந்தை

பச்சிளம் குழந்தை

அதற்கு அவர்கள் மருத்துவமனையில் பிரசவம் எதவும் நடைபெறவில்லை, யாரோ இந்த பெண் பச்சிளம் குழந்தையை வைத்து விட்டு சென்று உள்ளதாக கூறினார்கள்.. இதனால், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஆஸ்பத்திரியில் உள்ள சிசிவிடி கேமராவை ஆய்வு செய்ய துவங்கினர்... அப்போது, குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதற்கு முந்தைய தினம் இரவு, 10.30 மணியளவில் கர்ப்பிணி பெண், இந்த மருத்துவமனைக்கு வந்ததும், பிறகு கொஞ்ச நேரத்திலேயே அவர் சர்வ சாதாரணமாக வெளியே நடந்து சென்றதும் சிசிடிவி கேமராவில் பதிவானது தெரியவந்தது.

 கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி

இதனால், சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண் குறித்து விசாரித்தனர்... விசாரணையில் அந்த பெண் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சாய்ரா பானு என்பது தெரியவந்தது... 33 வயதாகிறது.. அந்த பெண்ணை ஸ்டேஷனுக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.. அப்போதுதான், அவர் ஒரு விதவை என்பதும், கணவர் இறந்து 4 வருடம் ஆகிவிட்டதும் தெரியவந்தது.. கணவர் இறந்ததுமே, பலருடன் தொடர்பு வைத்து வந்துள்ளார் சாய்ரா பானு.. இதில், லாரி டிரைவர் ஒருவருடன் சமீபத்தில் தகாத உறவில் இருந்தபோது அந்த குழந்தை உருவானதாக தெரிகிறது.

கர்ப்பம்

கர்ப்பம்

கர்ப்பமான சாய்ரா பானுவுக்கு கடந்த 2-ம் தேதி பிரசவ வலி வந்த நிலையில் அவர், வேறொரு பெண்ணின் துணையோடு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு வந்துள்ளார்... ஆனால், பிரசவ வலி அதிகமானதுமே, வயிற்றுவலி என்று சொல்லிவிட்டு, நேராக, பாத்ரூம் சென்று, அங்கு தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்... அதற்கு பிறகு, பெற்ற பச்சிளம் குழந்தையை கழிவறையின் சுவற்றின் மீது வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.

 துடிதுடித்த குழந்தை

துடிதுடித்த குழந்தை

ஆனால், அந்த குழந்தை இரவெல்லாம் பசியால் துடிதுடித்து அழுதுள்ளது.. அந்த சத்தம் மருத்துவமனையில் இருந்த யாருக்குமே கேட்கவில்லை.. பசியாலேயே கதறி அழுது, பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்தததையடுத்து, குழந்தையை கொலை செய்த சாய்ரா பானுவை போலீசார் கைது செய்துள்ளனர்.. கள்ள உறவால் பிறந்த குழந்தையை கொன்று விட்டு, அந்த குழந்தையை டாய்லெட்டில் வீசி சென்ற பெண்னால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது

 கள்ள உறவு

கள்ள உறவு

நாளுக்கு நாள் கள்ள உறவுகள் பெருகிவருவதுடன், அதன்மூலம் ஏற்படும் குற்றங்களும், வன்முறைகளும் அதிகரித்தபடியே உள்ளன.. அபிராமிகளும் பெருகியபடியே வருகின்றனர்.. கள்ளக்காதல் தவறல்ல என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டதை பற்றி கவலைப்பட இங்கு யாருமில்லை என்றாலும், பச்சிளம் பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியாவது நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+