பிரதமர் நல்லா காரியத்துக்கு தானே வருகிறார், அவரை வரவேற்போம் - பால் வளத்துறை அமைச்சர் நாசர்
திருவள்ளூர்: பிரதமர் நரேந்திர மோடி நல்ல காரியத்திற்காகத்தான் தமிழகம் வருகிறார் எனவும் பிரதமர் மோடியை வரவேற்கிறோம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளார். தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளதாகவும், மதுரையில் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாயின.
கடந்த ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, எதிர்கட்சியினராக இருந்த திமுகவினர் கோ பேக்மொடி என ஹேஸ் டேக்குடன் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கருப்புக் கொடி மற்றும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்கள் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

அதிமுக கேள்வி
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடியை வரவேற்பதாக திமுகவினர் கூறிவரும் நிலையில் அதிமுகவினர் பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்த பிரதமரை தற்போது திமுக வரவேற்பது ஏன் என சமூக வலைத் தளங்களிலும் கடுமையான வார்த்தை மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு நல்ல காரியத்திற்காக தான் வருகிறார் எனவும் அவரை வருகிறோம் என திமுகவைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்

பால் வளத்துறை அமைச்சர்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, பூந்தமல்லி சுகாதார மாவட்டம் சார்பில் 15 முதல் 18வயதினருக்கான தடுப்பூசி முகாம் ஆவடி, காமராஜர் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. முகாமை ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால் வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை 86சதவீதமும், 2வது தவணை 57சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தற்போது, 15முதல் 18வயதினருக்கான தடுப்பூசி போடுவதற்காக முகாம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

தடுப்பூசி போடும் பணிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1லட்சத்து 9ஆயிரத்து 200பயனாளிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், மேலும் மாவட்டத்தில், அரசு, தனியார், அரசு உதவி பெறும் 680 பள்ளிக்கூடங்களில் 40குழுக்களாக சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி உள்ளனர் எனவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 5பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு உள்ளது எனக் கூறிய அமைச்சர் நாசர், அதில், திருவேற்காட்டில் 2பேருக்கும் கும்மிடிப்பூண்டியில் 2பேருக்கும், மீஞ்சூரில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது எனவும், மேலும் மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் கிராமம் முதல் நகரம் வரை நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர் எனக் கூறினார்.

பிரதமர் மோடிக்கு வரவேற்பு
பொதுமக்களும் முககவசம் அணிந்தும் சமுக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், தமிழக அரசின் தொற்று நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து மோடி தமிழக வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், மோடி வருவதை வரவேற்கிறோம் எனவும், அவர் நல்ல காரியதிற்காக வருகிறார் என்பதால் அவரை வரவேற்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications