ஜெகத்ரட்சகனுக்கு எங்க எத்தனை சொத்துகள் இருக்குனு அவருக்கே தெரியாது.. ஆர்.காந்தி பேச்சால் பரபரப்பு
திருவள்ளூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு எங்கே எவ்வளவு சொத்து இருக்கிறது என்பது அவருக்க தெரியாது என தமிழக அமைச்சர் ஆர்.காந்தி பேசியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்றுமுன் தினம் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.

மற்ற இடங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
அவர் பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகளையும் வழங்கினார். இந்த மாவட்டத்தில் மாதந்தோறும 2170 பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும். இதற்காக ஏடிஎம் கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகள் வழங்கப்பட்டன. இதில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி வர்கீஸ், அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் நாசர், துரை சந்திரசேகர், கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். அவர் பேசுகையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு 5 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அவருக்கு எங்கே எவ்வளவு இருக்கிறது என அவருக்கே தெரியாது என பேசினார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சொந்த கட்சியை சேர்ந்த எம்பி ஜெகத்ரட்சகனின் சொத்துகள் குறித்து பொதுவெளியில் அமைச்சர் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் மீண்டும் விசாரணைக்குள்படுத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் காந்தி பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications