Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூவை ஜெகன் மூர்த்தி விவகாரம்.. கடத்தப்பட்ட சிறுவனின் தாய் வெளியிட்ட வீடியோ.. எந்த தொடர்பும் இல்லையாம்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் காதலனை தேடி விஜயஸ்ரீ தேடி வந்த நிலையில், இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பெண் வீட்டார் இருவரையும் தேடி வந்த நிலையில், ஏடிஜிபி ஒருவர் அலுவல் பணிக்காக பயன்படுத்தும் வாகனத்தை எடுத்து கொண்டு காதலனான தனுஷ் வீட்டிற்கு ஒரு கும்பல் சென்றுள்ளது. காதல் ஜோடி எங்கிருக்கிறார்கள் என்று அந்த கும்பல் கேட்ட போது, குடும்பத்தினர் தெரியாது என்று கூறி இருக்கின்றனர். இதனால் மர்மக் கும்பல் உடனடியாக தனுஷின் சகோதரனை கடத்தி சென்றுள்ளது.

jagan moorthy tiruvallur kidnap

என்ன பிரச்சனை?

இந்த விவகாரம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சில கிமீ தூரத்திலேயே கடத்தல் கும்பல் அந்த சிறுவனை இறக்கிவிட்டு தப்பியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண்ணின் உறவினர்கள் காலதுரையில் ஏடிஜிபி ரேங்கில் உள்ள காவல் உயர் அதிகாரியிடம் காவல் விவகாரம் குறித்து கூறியதாகவும், பெண்ணை மீட்க உதவி செய்யுமாறும் கோரியது தெரிய வந்துள்ளது.

பூவை ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை

இதன்பின் காவல் அதிகாரியின் சிபாரிசின் பெயரில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்எல்ஏ-வுமான பூவை ஜெகன் மூர்த்தியை பெண்ணின் குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். இதன்பின்னரே கடத்தல் சம்பவம் நடந்திருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பூஜை ஜெகன்மூர்த்தியிடம் விசாரிக்க காவல்துறையினர் சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுவனின் தாய் வீடியோ

ஆனால் அங்கு பூவை ஜெகன் மூர்த்தி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக 6 மணி நேரத்திற்கு பின் போலீசார் வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது, அங்கு பூவை ஜெகன் மூர்த்தி அங்கு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே கடத்தப்பட்ட சிறுவனின் தாய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புகார் என்ன?

அதில், என் பெரிய பையன் தனுஷ் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். முறையாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். திருவள்ளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க கூறினார்கள். அதன்பின் காவல் நிலையத்தில் அந்த பெண் எங்களுடன் இருப்பதாக கூறியது. இதனால் எழுதி கொடுத்துவிட்டு பெண்ணின் தந்தை சென்றுவிட்டார்.

எந்த சம்பந்தமும் இல்லை

இந்த சூழலில் ஜூன் 7ஆம் தேதி இரவு திடீரென எங்கள் வீட்டிற்கு ஒரு கார் வந்தது. காரில் என் சின்ன பையனை கூட்டிக் கொண்டு சென்றுவிட்டு, பின்னர் கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் வந்து விட்டுவிட்டார்கள். வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் பையனை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்ற கேட்டதால், பதற்றத்தில் 100க்கு அழைத்து புகார் அளித்துவிட்டேன். ஆனால் சில மணி நேரத்திலேயே பையன் வந்துவிட்டான்.

இதன்பின் காலையில் மீண்டும் நேரில் வந்து புகார் அளிக்க அழைத்தார்கள். புகார் எழுதி கொடுத்துவிட்டு வந்தேன். இதன்பின் நீதிமன்றம் சென்ற போது, பெண் வீட்டாரும் நாங்களும் சமாதானமாக செல்ல பேசி இருக்கிறோம். இதனால் புகாரை வாபஸ் வாங்கி கொள்கிறேன். இதற்கும் ஜெகன் மூர்த்தி அண்ணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுதொடர்பாக அவரும் நேரடியாக எங்களிடம் பேசவில்லை. நாங்களும் பேசவில்லை. இதுதான் உண்மை என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+