பாதுகாப்பு கருதி பழவேற்காடு மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல தடை! ஏன் என்னாச்சு?
திருவள்ளூர்: ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி எஃப் 14 என்ற ராக்கெட்டில் இன்சாட் 3 டிஎஸ் என்ற வானியல் முன்னறிவிப்பு செயற்கைகோள் இன்று (பிப்.17) செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்றைய தினம் இன்சாட் 3 டிஎஸ் என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. வானியல் முன்னறிவிப்புகளுக்காக ஏற்கெனவே இரு செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டு பணியாற்றி வரும் நிலையில் பேரிடர்களை துல்லியமாக கணிக்கும் வகையில் இன்சாட் 3 டிஎஸ் என்ற செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ள இந்த ராக்கெட்டுக்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் (பிப். 16) 2.30 மணிக்கு தொடங்கியது.
இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் , ராக்கெட் பாகங்களை அசம்பிள் செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுக்கான இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப் 14 (GSLV F 14) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications