கத்தியை காட்டி ரீல்ஸ்.. வட மாநில இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய சிறுவர்கள்.. திருத்தணியில் கொடூரம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் கத்தியை காட்டி மிரட்டுவது போல ரீல்ஸ் எடுத்த சிறுவர்கள், அப்போது ஏற்பட்ட தகராறில் வட மாநில இளைஞரை, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக ரத்தம் சொட்ட சொட்ட அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், போலீசார் 4 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் என்ற புலம்பெயர் தொழிலாளியை நான்கு சிறுவர்கள் அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிராஜ், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்
வடமாநில இளைஞர் கெஞ்சி கேட்டும் அவரை கொடூரமாக தாக்கும் சிறுவர்கள், இந்த காட்சிகளை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. வட மாநில இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிவிட்டு, சிறுவன் ஒருவன் வெற்றிச் சின்னத்தைக் காட்டிய காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
வட மாநில இளைஞரான சிராஜ், ரயிலில் சென்ற போது அவரை இந்த சிறுவர்கள் வம்பிழுத்ததாகவும், பிறகு ரயிலில் இருந்து இறக்கி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
நெஞ்சை உறைய வைத்த வீடியோ
இந்த தாக்குதலை செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளனர். நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொடூரக் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. தாக்குதலில் படுகாயம் அடைந்த சிராஜ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இந்த வைரல் வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் பின்னணி மற்றும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய காவல் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா போதையில் 4 சிறுவர்கள்
கஞ்சா போதையில் 4 சிறுவர்களும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில், திருவலங்காடு பகுதியை சேர்ந்த சிறார்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications