திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருமாங்கல்யத்தை திருடிய அர்ச்சகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்
திருவள்ளூர்: திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் அம்மனின் கழுத்தில் இருந்த மாங்கல்யம், தாலி சங்கிலி ஆகியவை திருடப்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கோவில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரின் பேரில் திருவேற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலில் அம்மனிடம் வரம் கேட்கலாம். ஆனால் அம்மனின் நகைகளையே திருடலாமா? அதுவும் அம்மன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை திருடியுள்ளனர். அதுவும் அம்மனுக்கு தினமும் பூஜை செய்யும் அர்ச்சகரே திருமாங்கல்யத்தை திருடியதுதான் அதிர்ச்சியளிக்கும் விசயம். திருவேற்காடு தேவி கருமாரியம்மனின் கழுத்தில் இருந்த நகைகளையே திருடியுள்ளதுதான் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை அருகே திருவேற்காட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம். பிரசித்திபெற்ற இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்தக் கோயிலுக்குப் பின்னால் நிறைய உண்மை கதைகள் உள்ளன.
புற்றாக அம்மன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டதாகவும் அதைத் தெய்வமாக மக்கள் வழிபட்டதாகவும் கருத்துக்கள் உள்ளது. பின்னர் அம்மன், பக்தர்களின் கனவில் தோன்றி கோயிலைக் கட்டச் சொன்னதாகவும் கதைகள் உள்ளன. இன்றைக்கும் கோவிலுக்கு அருகில் மிகப்பெரிய புற்று உள்ளது அதனை பக்தர்கள் மஞ்சள் குங்குமம் வைத்தும் பால் முட்டை வைத்தும் வழிபடுகின்றன.
இது தவிர இன்னொரு புராண கதையும் திருவேற்காடு தேவி கருமாரியம்மனைப் பற்றி உள்ளது. சிவபெருமான் கைலாசத்திற்குச் செல்லும் போது, அவர் தனது உடலில் உள்ள சாம்பலை வேர்க்கண்ணியிடம் கொடுத்து ஐந்து வேலைகளைச் செய்யும்படி கூறினார்.
அந்தரக்கண்ணி, ஆகாயகன்னி, பிரம்மகன்னி என ஏழு அம்சங்களில் வேர்க்கண்ணி தன்னை உருவாக்கி கொண்டவள். மதுரையில் மீனாட்சி, காஞ்சிபுரத்தில் காமாட்சி, காசியில் விசாலாக்ஷி.
இறுதியாக திருவேற்காட்டில் ஏழாம் வடிவம் கொண்டு வேற்கண்ணி அவதரித்தாள். இப்பெயர் வேல் மற்றும் கன்னி என்பதிலிருந்து பெறப்பட்டது. இங்கு பிரதான தெய்வமான கருமாரியம்மன் ரேணுகா பரமேஸ்வரியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருவறையில் ஸ்ரீ கருமாரி அம்மன் சுயம்பு வடிவில் சாந்த சொரூபத்துடன் காட்சி தருகிறாள். மூலவர் அம்பிகைக்குப் பின்புறம் அன்னை கருமாரி அம்மன். திருவுருவச் சிலை வடிவில் நான்கு திருக்கரங்களோடு அருள்பாலிக்கிறாள்.
அன்னை கருமாரி சிரசின் பின்புறம் அக்னி ஜூவாலை ஒளி வீச, நான்கு திருக்கரங்களில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் விளங்க அருட்காட்சி தருகிறாள். இந்தக் கோயிலில் அம்மனுக்கு தினமும் மாலை பிரதோஷ வேளையில் குங்கும அர்ச்சனை விசேஷமாக நடைபெறுகிறது. கருவறையில் கருமாரியம்மன் அருகில் அணையாத விளக்கு ஒன்று உள்ளது. இதை, 'பதி விளக்கு' என்று அழைக்கின்றனர். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோர் வீற்றிருப்பது விசேஷம். மேலும், இங்கு மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் உள்ளன. இவற்றில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறாள்.
இந்தப் பதி விளக்கு கருவறையில் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கிறது. அம்பிகையின் மறு ரூபமாக விளங்கும் இந்தப் பதி விளக்கையும் அம்பிகையோடு சேர்த்து பக்தர்கள் தரிசித்தால், குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சகல சௌபாக்கியங்களோடு வாழலாம் என்பது ஐதீகம்.
வெள்ளி செவ்வாய்கிழமைகளிலும் ஆடி மாதத்திலும் பக்தர்கள் கூட்டம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசனம் செய்ய அலைமோதும். பெரும்பாலான அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு குங்குமமே பிரசாதமாக வழங்கப்படும். ஆனால், இந்தக் கோயிலில் பசுஞ்சாணத்தால் ஆன சாம்பலையே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர்.
தினசரியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் தேவி கருமாரியம்மன் கருவறையில் உள்ள உற்சவர் கருமாரியம்மன் சிலையில் இருந்த 8 சவரன் மதிப்புள்ள தங்க நகை மற்றும் திருமாங்கல்யம் மாயமானது. இதனைக் கண்ட கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவில் நிர்வாகிகள் நடத்திய முதற்கட்ட விசாரணை கோவிலில் தினக்கூலியாக பணியாற்றும் அர்ச்சகர் சண்முகம் என்பவர் நகைகளை திருடி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோவில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரில், திருவேற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புகழ்பெற்ற தேவி கருமாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த நகை திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கோவில் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications