காப்பாத்துங்க சார்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்த பெண்.. ஒரே நாளில்.. செம ஆக்சன் எடுத்த "கமல்ஹாசன்"

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: 26 வயது திருமணம் ஆகி குழந்தை உள்ள பெண் ஒருவரை 20 வயது காதலன் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் புல்லரம்பாக்கம் அருகே வசித்து வந்துள்ளார் அந்த 26 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது.

இரண்டு குழந்தைகளும் அந்த பெண்ணுக்கு உள்ளது. கடந்த சில வருடங்களாக அந்த பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் மோதல் நிலவி வந்தது.

கணவன்

கணவன்

கணவன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அந்த பெண்ணை அடித்து உள்ளார். மோசமாக திட்டி உள்ளார். முதல் இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை இவர்கள் சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அதன்பின்தான் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் நிலவி வந்துள்ளது. இதையடுத்து கணவனை பிரிந்து விடலாம் என்று நினைத்து இருக்கிறார். அப்போதுதான் தனது ஏரியாவில் ஆட்டோ ஓட்டும் 20 வயது இளைஞர் விஜயகுமாரை பார்த்துள்ளார்.

உறவு

உறவு

இவர்கள் அடிக்கடி ஆட்டோவில் பயணிக்க பயணிக்க அப்படியே நட்பாகி உள்ளனர். இவர்கள் நட்பு காதலாக மாறி உள்ளது. கணவனிடம் கிடைக்காத அன்பு இவரிடம் கிடைக்க தொடங்கி உள்ளது. இதனால் அந்த பெண்ணும் விஜயகுமாரை நம்ப தொடங்கி உள்ளார். கணவன் இல்லாத நேரத்தில் விஜயகுமாரும் அடிக்கடி இந்த பெண்ணை பார்க்க வீட்டிற்கு வந்து இருக்கிறார். இவர்கள் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். விஜயகுமாரை அந்த பெண் அதிகம் நம்பி உள்ளார்.

ஆக்சன்

ஆக்சன்

இந்த நிலையில் 6 மாத காதல் இவர்களுக்குள் மிகவும் நெருக்கமான நிலையில், நேற்று முதல்நாள் விஜயகுமார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். எப்போதும் போவது தானே என்று நம்பி அந்த பெண்ணும் விஜய்குமாருடன் ஆட்டோவில் சென்றுள்ளார். அவர் ஆள் அரவமற்ற காட்டு பகுதியில் இருக்கும் வீடு ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே ஏற்கனவே காத்திருந்த சாம்ராஜ் சதீஷ் என்ற இரண்டு பேர் அந்த பெண்ணை கட்டி போட்டுள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

அந்த பெண் காப்பாற்றுங்க.. காப்பாற்றுங்க என்று கத்தியும் அங்கு ஆள் யாரும் வரவில்லை. பல மணி நேரங்கள் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு இவர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். வெளியே இதை சொன்னால் வீடியோ வெளியாகிவிடும் என்றும் மிரட்டி உள்ளனர். அதோடு வீடியோவை காட்டி பின்னர் அந்த பெண்ணை பயன்படுத்திக்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தனர். பின்னர் காயங்களுடன் வெளியே வந்து மெயின் ரோட்டிற்கு வந்து உள்ளார். அங்கிருந்து ஆட்டோ ஒன்றை பிடித்து புள்ளரம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

கைது

கைது

அங்கு இன்ஸ்பெக்டர் கமல்ஹாசனிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து விசாரணையில் குதித்த கமல்ஹாசன் நேற்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். போலீசார் தேடுவதை தெரிந்து கொண்டு அந்த 3 பேரும் பக்கத்துக்கு ஊரில் தலைமறைவாகி இருந்தனர். போலீசார் இதில் துப்பு துலக்கி நேற்று அவர்களை கைது செய்தனர். 3 பேர் மீது பலாத்கார வழக்கு பதியப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+