தீவிரவாதிகளுடன் தொடர்பு.. திருவள்ளூரில் இளைஞரை வளைத்து பிடித்த என்ஐஏ.. தீவிர விசாரணை
திருவள்ளூர்: பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி திருவள்ளூரில் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ், அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் அண்மைக்காலமாக இந்தியாவில் தனது கொள்கைகளையும், கருத்துகளையும் பரப்பும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலக்கட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் தீவிரவாத அமைப்புகளால் எளிதாக ஈடுபட முடிகிறது. ஒருகாலத்தில், ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை குறி வைத்து இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் தற்போது தென் மாநிலங்கள் மீதும் தனது கவனத்தை திருப்பி இருக்கின்றன. இதில் கேரளாவில் உள்ள இளைஞர்கள் ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் விரித்த வலையில் அதிக அளவில் சிக்கியிருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே, ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஏராளமான கேரள இளைஞர்களை போலீஸாரும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் கைது செய்துள்ளன.

அந்த வகையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறி சென்னையை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர் ராஜா முகமது (34). இவர் கடந்த ஓராண்டாக திருவள்ளூரில் உள்ள தனது மாமனாரின் வீட்டில் தங்கியுள்ளார். இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சில தீவிரவாத அமைப்புகளுடன் திருவள்ளூரில் இருந்து ஒருவர் பேசி வருவதாக சென்னை குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ரகசிய விசாரணை நடத்தி வந்த சிறப்பு புலனாய்வு பிரிவினர், நேற்று காலை அதிரடியாக ராஜா முகமதுவை கைது செய்தனர். சவூதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரிடம் ராஜா முகமது சிக்னல் என்ற செயலியின் மூலம் பேசி வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, என்ஐஏ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளும் ராஜா முகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சவூதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர், ராஜ முகமதுவை அந்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது. எந்த தீவிரவாத அமைப்புடன் ராஜா முகமது தொடர்பு வைத்திருந்தார்; இந்தியாவில் தாக்குதல் நடத்துவது குறித்து அவர்கள் ஏதேனும் சதித்திட்டம் தீட்டினார்களா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீஸாரும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications