காங்கிரஸ் பிரமுகர் அடித்துக் கொலை.. கஞ்சா போதையில் வெறிச் செயலில் ஈடுபட்ட நபர் கைது!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருத்தணி ஆர்.கே.பேட்டையில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவுத் தொழிலாளியான இவர், அம்மையார்குப்பம் பகுதி காங்கிரஸ் நகரத் துணைத் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Crime tiruvallur congress

நள்ளிரவு 12 மணி அளவில் தனது வீட்டில் ராஜேந்திரன் தறி மிஷின் ஓட்டிக் கொண்டிருந்தார். பின்பு சிறுநீர் கழிக்க அவர் வீட்டு பின்புறம் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்களால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜேந்திரனின் மனைவி நேற்று இரவு 12 மணி அளவில் ராஜேந்திரனை காணவில்லை என சிறிது நேரம் தேடிப் பார்த்துள்ளார் ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியாததால் மறுபடியும் வீட்டிற்கு சென்று தூங்கிவிட்டார். இந்நிலையில் காலையில் வீட்டுக்குப் பின்புறம் சடலமாகக் கிடந்துள்ளார். ராஜேந்திரனுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்கள் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜேந்திரன் தனது வீட்டுக்கு பின்புறம் சடலமாக கிடக்கும் தகவல் அறிந்து தகவலறிந்து ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து ஆர்கே பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎஸ்பி கந்தன் நேரில் சென்று சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தார். திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் வர வைக்கப்பட்டது. கை ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இந்நிலையில், ராஜேந்திரனை கொன்றதாக ஹரி கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரன் அந்த பகுதியில் உள்ள பள்ளியின் அருகே சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதை அறிந்து தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல அவரது வீட்டுக்கு அருகே இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரவில் மர்ம நபர்கள் திருட முயன்ற போது அதையும் தட்டிக்கேட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜேந்திரனை நேற்று இரவு மர்ம நபர் தலையில் கற்களை போட்டு அடித்து கொலை செய்துள்ளார். ஹரிகிருஷ்ணன் என்ற நபர் கஞ்சா புகைத்து கொண்டிருந்ததை ராஜேந்திரன் தட்டிக்கேட்ட நிலையில் கஞ்சா போதையில் இருந்த ஹரிகிருஷ்ணன் ராஜேந்திரன் தலைமீது கற்களை தூக்கிப் போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலையில் ஹரிகிருஷ்ணன் மட்டும்தான் சம்பந்தப்பட்டுள்ளாரா அல்லது இன்னும் யாரேனுக்கும் தொடர்புள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+