முருகன் கோயிலில் ஒரே ஆச்சரியம்.. நிலவறைக்குள் 2 சீக்ரெட் அறைகள்? வியந்த நின்ற திருவள்ளூர் பக்தர்கள்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள முருகன் கோயிலின் ஒரு பகுதி, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்த கோயில் அகற்றப்பட்டுவிடுமோ? என்று பொதுமக்கள் கலக்கத்திலும் சந்தேகத்திலும், உள்ள நிலையில், ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த தகவல்தான் கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பட்டரைப்பெரும்புதூர் என்ற கிராமம்.. இங்கு திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் வழியில், ஒரு முருகன் கோயில் உள்ளது.. இது மிகவும் பழமையான கோயிலாகும்.. 1200 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் உத்தரவு

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலின் ஒரு பகுதி, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.. இதன்காரணமாக, கோயிலை அகற்றுவதற்கான வாய்ப்புள்ளது தெரியவந்தது.. எனவே, இந்த பழமையான கோயிலை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு தந்திருந்தனர்.
மக்களின் இந்த கோரிக்கையை ஏற்ற மாவட்ட கலெக்டரும், பழமையான கோயிலை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மாவட்ட தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்..
பொதுமக்கள் கோரிக்கை
அதன்படியே, மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் கோயிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, கோயிலின் உள்ளே நிலவறை இருப்பதை உறுதி செய்தார்.. இதையடுத்து, தீயணைப்பு துறையினருடன், பாதுகாப்பு உபகரணங்களுடன் நிலவறைக்குள் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கோயிலின் தரைத்தளத்தில் உள்ள 10 அடி உயரத்தில் 8 அடி அகலத்தில 2 அறைகள் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.. ஆனால் அந்த அறைகளில் எந்தப் பொருட்களும் இல்லை.. எனினும், இதுபோன்ற நிலவறைகளில் சிலைகள், ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரகசிய அறைகள்
கடந்த மாதமே சுரங்கப்பாதை குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருந்தது..அதாவது, பட்டறை பெரும்புதூர் கிராமத்தில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், அந்த பாதை சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவலங்காடு நடராஜர் கோவிலை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது 2 சுரங்கப்பாதைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் மன்னர்கள் இந்த சுரங்க அறைகளை, தங்களது சிறப்பு பூஜைகளுக்காக பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிகிறது.. முருகன் கோயிலுக்குள் 1200 ஆண்டு பழமையான 2 ரகசிய அறைகள் இருப்பது, பக்தர்களுக்கும் வியப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications