சோழவரத்தை அதிர வைத்த மர்ம கேங்.. ஒரே நாளில் பல சம்பவங்களை அரங்கேற்றிய கும்பல் ஆந்திராவில் கைது!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: சோழவரம் பகுதியில் திமுக பிரமுகர் வீடு மற்றும் லாரி யார்டில் நேற்று நாட்டு வெடி குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பிரபல ரவுடி உட்பட 4 பேரை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் நேற்று 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பினர். இதில் திமுக பிரமுகர் ஜெகனின் இரண்டு கார்கள் சேதம் அடைந்துள்ளன.

Tiruvallur crime police

மேலும், சோழவரம் அருகே உள்ள சிறிலியம் என்ற கிராமத்தில் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன் சரண் ராஜ் என்பவரது வீட்டில் இரண்டு கார்களின் கண்ணாடிகளையும் மர்ம நபர்கள் உடைத்தனர்.

மேலும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லாரி யார்டு ஒன்றில் இந்த மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். அப்போது குண்டு வெடித்த சத்தம் கேட்டு லாரி ஓட்டுநர் சிவா என்பவர் வெளியில் வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிவாவை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவமும், ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவமும், இரண்டு கார்கள் உடைக்கப்பட்ட சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு.. திருவள்ளூரில் அடுத்தடுத்து சம்பவம்.. அதிரவைத்த 4 பேர்!


இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவங்களைச் செய்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக பிரபல ரவுடிகள் டியோ கார்த்திக், சுரேஷ், விக்கி உள்ளிட்ட 4 பேரை ஆந்திராவில் இன்று தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

4 பேரையும் ஆந்திராவில் கைது செய்துள்ள தனிப்படை போலீசார், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அஜீத்குமார், நித்தீஸ்வரன் ஆகிய இருவரிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+