சல்லி சல்லியா நொறுங்குதே.. ஓவரா அலைக்கழிக்கப்படுதா பாஜக? சென்னையில் என்னாக போகுதோ.. விழிக்கும் தாமரை
திருவள்ளூர்: தமிழக பாஜகவின் நடைபயணம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதுகுறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்தி வருகிறது. மாவட்டந்தோறும், சாலையின் வழியெங்கும் அண்ணாமலைக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது..

ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அண்ணாமலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். ஆனால், எந்த ஊருக்கு அண்ணாமலை போனாலும், திமுகவை தாறுமாறாக விமர்சிப்பதை விடுவதில்லை..
திமுக அரசு: இப்படித்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டபோதும், திமுகவை கடுமையாக விமர்சித்தார். "தமிழகத்தில் பாஜக முதல் சக்தியாக உருவெடுத்து இருக்கிறது.. "என் மண், என் மக்கள்" யாத்திரை மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது. இந்த யாத்திரை, தமிழகத்தின் அரசியலை அடியோடு புரட்டிப் போடும் என்ற நம்பிக்கையோடு நடந்துக்கொண்டிருக்கிறது என்றார்..
கும்மிடிப்பூண்டி: அதாவது, வெளிமாவட்டங்களில் எல்லாம் நடைபயணத்தை முடித்து விட்டு, திருவள்ளூர் மாவட்டத்திலும் நிறைவு செய்கிறார். நேற்றைய தினம், அண்ணாமலையின் நடைபயணம் மேற்கொள்வதை கேள்விப்பட்டு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கும்மிடிப்பூண்டியில் திரண்டுவிட்டனர்.. மாவட்ட நிர்வாகிகளும், பாஜக தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தின் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டி உள்ளது.. அங்கிருக்கும் சாலைகளில் அவசர அவசரமாக தார் ரோடு போடப்பட்டதாம்.. "இங்கு குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளன.. அண்ணாமலை வந்தால், இதுகுறித்து நிச்சயம் கேள்வி கேட்பாருன்னு அவசரமா வேலை நடந்துகிட்டு இருக்கு... ஜல்லி, சிமெண்ட் கலவை கொண்டு பேட்ச் ஒர்க் நடந்துட்டு இருக்கு.. ஆனால், தேர் திருவிழாவிற்காக வேலை நடப்பதாக அதிகாரிகள் சமாளிக்கிறார்கள்" என்கிறார்களாம் அந்த பகுதி பொதுமக்கள்.
ஞாயிறு: அந்தவகையில், ஆவடி, மீஞ்சூர், பொன்னேரி என ஒரு இடம் மிச்சமில்லாமல் அண்ணாமலையின் நடைபயணம் தொடர்கிறது.. சென்னையில் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொள்கிறார்.. இதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
காரணம், பாஜக பொதுக்கூட்டமும் நடக்கிறது.. அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும் இதில் பங்கேற்கிறார்.. எனவே, இந்த பொதுக்கூட்டத்தை சோழிங்கநல்லூரில் நடத்த பாஜகவினர் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால், போலீசார் கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை.. பிறகு, பெருங்குடி அல்லது நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டனர்.. வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதற்கும் போலீசார் அனுமதி தரவில்லை.
அமைந்தகரை: இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஒன்றின் வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்த பாஜக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது... ஒருவேளை இதற்கு அனுமதி கிடைத்தால், அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று பாஜகவிற்கு ஆதரவு திரட்டிவிட்டு விழா மேடைக்கு நட்டா செல்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கும் சென்னை போலீசார் அனுமதி தரவில்லை..
இப்போது நேற்றிரவு திடீரென மின்ட் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.. நட்டா வரும் நேரம் பார்த்து, இப்படியெல்லாம் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சென்னை: ஏற்கனவே, தன்னுடைய நடைப்பயணத்தை சென்னையில் நிறைவு செய்ய தீர்மானித்திருந்தார் அண்ணாமலை. ஆனால், சென்னையில் அடங்கியுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைப்பயணத்துக்கு சென்னை போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர். பொதுக்கூட்டம் நடத்தப்பட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லையாம்.
தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலையால், சென்னை தொகுதிகளுக்குள் நடக்க முடியாமல் செய்து விட்டதே திமுக அரசு என்ற பொருமல்கள் பாஜகவினரிடையே எழுந்து வரும்நிலையில், பொதுக்கூட்டத்தை நடத்தவும் இப்படி அலைக்கழிக்கப்பட நேரிடுகிறதே என்ற எரிச்சலும் ஏற்பட்டுள்ளதாம்.
நடைபயணம்: எது எப்படியோ, பாஜக அரசின் சாதனைகள் ஒருபக்கம், திமுக அரசுக்கு எதிரான கருத்துக்கள் மறுபக்கம் என அண்ணாமலையின் நடைபயணம் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது.. அதுமட்டுமல்ல, அண்ணாமலையின் இந்த நடைபயணம், பாஜகவின் தேர்தல் பிரச்சார களமாகவும் மாறியிருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.. ஞாயிற்றுக்கிழமை என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications