திருவள்ளூர் ஜெயந்தியை நசநசனு நச்சரித்த மகன்.. டக்னு கிச்சனுக்கு ஓடிப்போய்.. அப்படியே மலைத்த மருமகள்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: பெற்ற மகன் என்றும் பாராமல், தாய் செய்த காரியம், திருவள்ளுர் மாவட்ட மக்களை அதிர வைத்து வருகிறது.. மருமகள் பாரதி தந்த புகாரையடுத்து, மாமியாரை கைது செய்த போலீசார், தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி.. 43 வயதாகிறது.. தொடுகாடு பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு 27 வயதில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகன் இருக்கிறார்.. இவருக்கு திருமணமாகிவிட்டது. மருமகள் பாரதிக்கு 23 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

Tiruvallur Thiruvallur Petrol

ஆனால், கிருஷ்ணமூர்த்தி எந்த வேலைக்கும் போவது கிடையாதாம்.. எந்நேரமும் வீட்டிலேயே இருந்துள்ளார்.. எப்போது கேட்டாலும், வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தையே சொல்லி கொண்டிருந்தாராம்.

பணம் கேட்டு மிரட்டல்

பிறகு ஒருகட்டத்தில் பிசினஸ் செய்ய போவதாகவும், அதற்கு பணம் வேண்டும் என்றும் தன்னுடைய அம்மா ஜெயந்தியிடம் கேட்டுள்ளார்.. ஆனால், ஊதாரித்தனமாக சுற்றித்திரியும் தன்னுடைய மகன், பணத்தையும் வீணாக்கிவிடுவார் என்பதால், தொழில் தொடங்குவதற்கு பணம் தர மறுத்து வந்துள்ளார். இது தொடர்பாக அம்மாவுக்கும், மகனுக்கும் மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கிருஷ்ணமூர்த்தி மறுபடியும் தன்னுடைய அம்மாவிடம், தொழில் செய்யபோவதாகவும், அதற்கு காலம் தாழ்த்தாமல் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு தகராறு செய்துள்ளார்.. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில், பணம் தந்தாக வேண்டும் என்று, அம்மாவை மிரட்ட துவங்கியிருக்கிறார்..

அலறல் சத்தம்

"எந்த வேலைக்கும் போகாமல், வீட்டிலிருந்து கொண்டு என்னையே மிரட்டுகிறாயா? என்று ஆவேசமடைந்த ஜெயந்தி, வீட்டிலிருந்த பெட்ரோலை எடுத்து கிருஷ்ணமூர்த்தி உடலில் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டார்.. இதில் உடம்பெல்லாம் தீப்பற்றி, வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார் கிருஷ்ணமூர்த்தி..

அவரது அலறலை கேட்டு, மனைவி பாரதியும், அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தவர்களும் பதறியடித்து கொண்டு வந்தனர்.. அங்கே கிருஷ்ணமூர்த்தி நெருப்பில் வெந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர் விசாரணை

அவருக்கு உடனடி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும், கிருஷ்ணமூர்த்தியை டாக்டர்களால் காப்பாற்ற முடியவிலலை. அன்று இரவே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து மருமகள் பாரதி மப்பேடு போலீசில், புகார் செய்தார்... இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயந்தியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். பெற்ற மகன் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்திய சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+