திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் கருவறையில்.. "சேர்" போட்டு உட்கார்ந்து.. திடீர்னு சத்தம்.. ஓ காட்
திருவள்ளூர்: திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டீங்களா? அந்த 2 வீடியோவையும் பார்த்தீங்களா? ஊரெல்லாம் இதே பேச்சுதான்..!!
நாளுக்கு நாள் ரீல்ஸ் வீடியோவுக்காக எடுக்கப்படும் ரிஸ்க்குகள், பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.. நேற்றுகூட உத்தரபிரதேசத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.

மொட்டை மாடி: அந்த இளைஞருக்கு 21 வயதுதான் ஆகிறது.. இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோ பதிவிட நினைத்தார். இதற்காக அங்கிருக்கும் பள்ளியின் மொட்டை மாடியில் வீடியோ எடுக்க விரும்பினார்..
கால்களை ஸ்லாப் இடையே வைத்துக்கொண்டு, 2 கைகளிலும் செங்கல்லை பிடித்துக்கொண்டு, அங்கிருந்து தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்துள்ளார்.. இதை அவரது நண்பர்களும் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். திடீரென அங்கிருந்த ஸ்லாப் இளைஞர் மீது விழுந்துவிட்டது. இதில், உடல்நசுங்கி இறந்துவிட்டார் இளைஞர்.
ஏழ்மை குடும்பம்: இறந்துபோன 21 வயது இளைஞரின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.. ரிக்ஷா ஓட்டுபவராம்.. குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க படாதபாடு பட்டிருக்கிறார். ஆனாலும், இந்த ரீல்ஸ் மோகம் உயிரையும் காவு வாங்கிவிடுகிறது.
இதோ நம்ம ஊரில் ஒரு ரீல்ஸ் அட்டகாசம் நடந்துள்ளது.. நம்முடைய திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.. அம்மன் கோயில்களில் மிகவும் முக்கியமானது..
பக்தர்கள்: தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திருவேற்காடு கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.. விரைவில் கும்பாபிஷேகம் செய்ய போகிறார்கள்... எனவே, அதற்கான திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பணியில் நிறைய ஆண்கள், பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கோவில் பணிகளை செய்ய வந்த இந்த பெண்கள், எல்லாரும் ஒன்று சேர்ந்து வீடியோ எடுத்திருக்கிறார்கள்.. அதுவும், திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் வளாகத்துக்குள்ளேயே, பெண் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து வீடியோ எடுத்துள்ளனர்.
கருமாரி அம்மன்: கருமாரி அம்மன் படத்திற்கு கீழேயே, நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொண்டனர்.. வடிவேலு காமெடியை பேசி இந்த ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இத்தனைக்கும் கோயிலுக்குள் நிறைய பக்தர்கள் அப்போது இருந்துள்ளனர்.. இந்த பெண்கள் வீடியோ எடுப்பதை அதிர்ச்சியுடன் பார்த்து நின்றுள்ளனர்.. ஆனால், அந்த பெண்களோ எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல், வீடியோ எடுப்பதிலேயே மூழ்கியிருக்கிறார்கள்..
டயலாக்: அரசு படத்தில், "பிச்சுமணி" வடிவேலு, கோவிலில் மணி அடிக்கும் வேலையை, ராஜினாமா செய்துவிட்டு போவாரே, அந்த டயலாக்கை பேசி நடித்திருக்கிறார்கள் இந்த கோவில் பணியாளர்கள்..
இதற்கு பிறகு இன்னொரு வீடியோவும் எடுத்துள்ளனர். அதில், "இது போல சொந்தம் தந்ததால், இறைவா வா நன்றி சொல்கிறோம், உனக்கேனும் சோகம் தோன்றினால், இங்கே வா இன்பம் தருகிறோம்" என்ற பாட்டுக்கு கோயிலின் கருவறை பக்கத்தியே வீடியோ எடுத்து நடித்துள்ளனர்... இந்த 2 வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது.
பெண் பணியாளர்கள்: அப்போதுதான், இந்த பெண் பணியாளர்களின் அட்டகாசத்தை பார்த்து பக்தர்கள் அதிர்ந்து போனார்கள்.. இணையத்தில் இவர்களுக்கு கண்டனமும் எழுந்துவருகின்றன.. புனிதமாக கருதும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் கருவறை அருகே இப்படியா அநாகரிகமாக நடந்து கொள்வது? இவர்கள் மீது அறநிலையத்துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயில் வளாகத்தில், யாரும் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் சிலர் இதை மீறிவிடுகிறார்கள். இப்படித்தான் 2 மாதங்களுக்கு முன்பு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலும் 2 பேர் டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டிருந்தனர்.
மன்னிப்பு: புனிதமான இடமாக கருதப்படும் கோயில் வளாகத்துக்குள், சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதா? என்று பக்தர்கள் ஆவேசமானார்கள்.. இது தொடர்பாக அறநிலையத்துறை போலீசிலும் புகார் தரப்பட்டது. இறுதியில் அந்த 2 பேரும், "ஸாரி" கேட்டு வீடியோ போட்டது நினைவிருக்கலாம்..!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications