திருவள்ளூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவள்ளூரில் தீண்டாமை சுவர்.. களத்தில் இறங்கிய கட்சிகள்.. ஓரிகு நாட்களில் இடிக்க திமுக அரசு தீவிரம்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் அருகே தீண்டாமை சுவர் இருந்து வரும் நிலையில் அதை அகற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் களமிறங்கியது. மேலும் இந்த சுவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இடிக்கப்படும் என தெரிகிறது.

Recommended Video

    திருவள்ளூரில் தீண்டாமை சுவர்.. களத்தில் இறங்கிய பாஜக.. ஓரிரு நாட்களில் இடிக்க திமுக அரசு தீவிரம்!

    ஆரம்பாக்கம் அருகே உள்ளது தோக்கமூர் கிராமம். இங்கு பிறபடுத்தப்பட்ட மக்கள் ஒரு பகுதியிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு பகுதியிலும் வசித்து வருகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் திரௌபதி அம்மன் கோயிலை பராமரித்து வந்தனர்.

    கோயிலை சுற்றி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் முள்வேலி அமைக்க தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுமதி மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    அன்றாடம் அரங்கேறும் ஆணவக்கொலைகள்... தனிச்சட்டம் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் அன்றாடம் அரங்கேறும் ஆணவக்கொலைகள்... தனிச்சட்டம் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்

    அரசியல் கட்சிகள்

    அரசியல் கட்சிகள்

    இந்த தகவல் அறிந்து மாவட்ட பாஜக தலைவர் சரவணன் மற்றும் மாநில துணை தலைவர் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு தீண்டாமை சுவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. அது போல் தீண்டாமை சுவர் உள்ள இந்த கிராமத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மாவட்ட ஆட்சியர்

    மாவட்ட ஆட்சியர்

    இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், அமைதி பேச்சுக்கு இரு முறை ஏற்பாடு செய்தார். அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தீண்டாமை சுவரை இடிப்பதுடன் பொது இடத்தில் அமைக்கப்படும் முள்வேலியை அகற்றவும், மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தைக்கு பின்னர், திரௌபதி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களையும் அனுமதிக்க பிற்படுத்தப்பட்ட மக்கள் சம்மதித்துள்ளார்கள். இந்த தீண்டாமை சுவர் கடந்த 6 ஆண்டுகளாக அமைக்கப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டதால குழந்தைகள் பள்ளி செல்வதற்கும் பிற சமூகத்தினர் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வருவதற்கும் அவதியுறும் நிலை உருவாகியுள்ளது.

    விரைவில் இடிப்பு

    விரைவில் இடிப்பு

    இதுகுறித்து ஒன் இந்தியா சார்பில் விசாரித்ததில்: இந்த தீண்டாமை சுவரை இடிக்கும் விவகாரத்தில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையே இடிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுவதால் அந்த பணி தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீண்டாமை சுவர் இடிக்கப்படும் என நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

    English summary
    Untouchability wall in Tiruvallur will be demolished soon after 2 peace talks hold by district administration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X