ஃபேன் இல்லை.. வசதி இல்லை.. எஸ்.பி. சட்டையை பிடித்து தள்ளி விட்ட பாஜகவினர்.. திருத்தணியில் ஷாக்!
திருத்தணியில் பாஜகவினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர்: எஸ்பியின் சட்டையை பிடித்து இழுத்து.. கல்யாண மண்டபத்தில் ஃபேன் இல்லை, வசதி இல்லை என்று கைதான பாஜகவினர் வாக்குவாதம் செய்ததால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணியில் இன்று பாஜகவினர் யாத்திரை நடத்தினர்.. இதையடுத்து, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைதாகினர்.

அனைவரையுமே திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையிலான போலீசார், ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் அவர்களை அடைத்தனர்... அப்போது அந்த மண்டபத்தில் ஃபேன் இல்லை என்று தெரிகிறது.. அதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கொண்டே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த பேச்சுவார்த்தை நடத்திய எஸ்பி சட்டையை பிடித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்பி அரவிந்தனின் சட்டையையும் பிடித்து தள்ளி விட்டனர். இதனால் மேலும் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
பிறகு அண்ணாமலை அங்கிருந்தோரை சமாதானம் செய்து, போராட்டத்தை கைவிட செய்து திரும்பவும் மண்டபத்திற்குள்ளே அழைத்து சென்றனர். எஸ்பியின் சட்டையை பிடித்து இழுத்து வாக்குவாதம் செய்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, சென்னை போலீஸ் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீசின் எல்லையை பிரிக்கும் இந்த பகுதியில் 2 மாவட்ட போலீசாரும் தீவிரமாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications