ஆனதை பார்த்துக்கோ..ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் நடுரோட்டில் காரை நிறுத்தி 'போதை' பாஜக பிரமுகர் ரகளை!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் பாஜக பிரமுகர் போதையில் ரகளை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவராக இருப்பவர் குபேரன். பொன்னேரியை சேர்ந்தவர் குபேரன்.

 Video of Drunken Ponneri BJP Functionary shared in Social Media

குபேரன் மனைவியுடன் பொன்னேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென் காரை நெடுஞ்சாலையிலேயே நிறுத்திவிட்டு மனைவியுடன் குபேரன் கீழே இறங்கினார். குபேரனின் இந்த செயலால் அப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல் நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தன.

குபேரன் நடு ரோட்டில் காரை நிறுத்தியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது ஆம்புனஸ் ஒன்றும் குபேரனின் இந்த சேட்டையால் வாகன நெரிசலில் சிக்கியது.

 Video of Drunken Ponneri BJP Functionary shared in Social Media

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது வழிவிடுங்க என கூறினர். ஆனால் இதனை கேட்காத அந்த பாஜக பிரமுகர், ஆனதை பார்த்துக்கோ என சலம்பலைத் தொடர்ந்தார். சிறிது நேரம் பாஜக பிரமுகரின் இந்த சலம்பல் தொடர்ந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 Video of Drunken Ponneri BJP Functionary shared in Social Media

சமூக வலைதளங்களில் பாஜகவினர் பழைய அல்லது போலியான வீடியோக்களை பகிர்வதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. சென்னை மழை தொடர்பாக பாஜகவினர் பகிர்ந்த வீடியோக்கள் சர்ச்சையாகவும் ஆனது. தற்போது பாஜக பிரமுகரே போதையில் தள்ளாடியபடி மனைவியுடன் நடு ரோட்டில் நின்று சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+