டோட்டலா குப்புற விழுந்த பெண்கள்.. கணவனின் ஸ்மார்ட்.. மனைவியின் கவர்ச்சி சொல்.. திகைத்த திருவள்ளூர்
திருவள்ளூர்: திருவள்ளூர் தம்பதி செய்த காரியத்தை கண்டு, அதிர்ந்து போயிருக்கிறார்கள் மக்கள்.. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்? நாளுக்குநாள் மோசடியில் சிக்கி, கவர்ச்சி பேச்சுக்களில் வீழ்ந்து, தங்கள் பணத்தை தொலைப்பவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே வருகிறது.
திருத்தணி பைபாஸ் சாலை, பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவர் ரகு.. இவருக்கு 30 வயதாகிறது. மனைவி சந்தியாவுக்கு 29 வயதாகிறது.. இவர்கள் இருவருமே திருத்தணியில், பழைய சென்னை சாலை, பூங்கா தெருவில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்கள். இதே நிறுவனத்தில் வேலஞ்சேரி பகுதி சோ்ந்த நந்தினி என்ற 21 வயது பெண்ணும் அசிஸ்டென்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறாா்.

கிராமங்கள்: இவா்கள் 3 மூவரும், திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், ரூ.10,800 கட்டினால் வீட்டு உபயோக பொருள்கள் கொடுத்தும், ஆன்லைனில் வேலை என்று கூறியும், நீங்கள் இன்னொரு நபரை சோ்த்தால், உங்களுக்கு, ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு நபரை சோ்க்கும்போதும், ஊக்கத்தொகை தொடா்ந்து வரும் என்று ஆசை வாா்த்தைகளை கூறி நிறுவனத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோரை உறுப்பினா்களாக சோ்த்ததாகவும் தெரிகிறது.
இளம்பெண்கள்: இவர்களின் பேச்சை நம்பி, ஏராளமான இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அதிகளவில் குவிந்துவிட்டனர்.. கடந்த புதன்கிழமை வரைக்கும், 250 க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் சோ்ந்து பணம் கட்டிவிட்டார்களாம்.. இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த பணத்துக்கான ரசீதையும் தனியாா் நிறுவனம் அப்பெண்களுக்கு வழங்கியிருக்கிறது.
இதனிடையே, வீட்டு உபயோக பொருள்கள் வாங்குவதற்கு சென்ற பெண்கள் பெரும் அதிா்ச்சி அடைந்தனா். காரணம், வெறும் ரூ.1,000 மதிப்பிலான பொருள்கள் மட்டுமே வழங்கியதால் ஆத்திரமடைந்த, 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், கட்டிய பணத்தை திருப்பிதர வேண்டும் எனக் கூறி தனியாா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
திருத்தணி : இதுகுறித்து தகலறிந்ததும் திருத்தணி போலீசார் விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர்.. ரகு, சந்தியா, நந்தினி 3 பேரையுமே பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த சம்பவம் திருவள்ளூரையே அதிர வைத்து வருகிறது.. இந்த 3 பேரும் பெண்களிடம் பேசும்போது, "நீங்கள் 10,800 ரூபாயை டெபாசிட்டாக செலுத்தி, எங்கள் கம்பெனியில் உறுப்பினராக வேண்டும். நீங்கள் செலுத்தும் பணத்துக்கு உங்களுக்கு சத்துமாவு, பற்பசை, தலைக்கு தேய்க்கும் ஆயில், தேன், ஆம்லா ஜூஸ் உள்ளிட்டவை வழங்குவோம்.
டீம் லீடர்: பிறகு டெபாசிட் செய்பவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களை எங்கள் கம்பெனியில் உறுப்பினராக சேர்த்துவிட்டால், அதற்கேற்ப உங்களுக்கு கமிஷன் கொடுக்கப்படும். டீம் லீடராக்கப்படுவீர்கள்.. இவ்வளவையும் நீங்கள் வீட்டிலிருந்தப்படியே செய்யலாம்.. ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். இந்த பேச்சில்தான் படிக்காத கிராம மக்களிலிருந்து படித்த கல்லூரி மாணவிகள் வரை ஏமாந்திருக்கிறார்கள்.
10800 ரூபாய்க்கு 2500 ரூபாய் மதிப்பிலான கிழங்கு மாவு பாக்கெட் தந்தார்களாம்.. இதை சாப்பிட்டால், சர்க்கரை நோய், BP, என நோயும் வராது.. டூத் பேஸ்ட் 1500 ரூபாயாகும். தேன்பாட்டிலின் விலை 500, தலைமுடி கொட்டாத தேங்காய் எண்ணெய் 1200ரூபாய் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
கம்மல், செயின்: அதனால்தான் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை டெபாசிட் செய்துள்ளனர்.. இதற்காக கம்மல், செயின். மூக்குத்தி என நகைகளை விற்றும் கடன் வாங்கியும் பணத்தை செலுத்தி உடனே டீம் லீடராக பதவியை பெற்றுள்ளனர்.. உடனே அவரவர் அக்கவுண்ட்களில் பணமும் வர ஆரம்பித்துவிட்டது.. இதையெல்லாம் பார்த்ததுமே, ஒட்டுமொத்த பெண்களும் குஷியாகிவிட்டனர்.. தங்களுக்கு பணம் வருவதை பார்த்ததுமே, உறவினர்கள், நண்பர்களை இந்த திட்டத்தில் சேர்த்துவிட்டனர்.
ஆனால் நிறுவனத்திலிருந்து பணம் தருவது நின்றுவிட்டது.. இதுகுறித்து பலமுறை கேட்டும் பதிலளிக்காதபோதுதான், தாங்கள் ஏமாந்துபோனது தெரியவந்தது.. இந்த ஆத்திரத்தில்தான், கம்பெனி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை: இப்போது கைதான 3 பேரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் 3 பேருமே லட்சக்கணக்கில் பணத்தை கறந்திருப்பது தெரியவந்துள்ளது. பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் , எப்படியும் இவர்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கலாம் என்கிறார்கள். அதனால், இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications