திருவண்ணாமலை மண்சரிவு: 7 பேர் பலி.. தவெக விஜய் இரங்கல்.. தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், 3 வீடுகள் மண்ணில் புதையுண்டு 7 பேர் உயிரிழந்தனர். இந்த செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.

vijay landslide

திருவண்ணாமலை தீப மலையில் நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையினால், திருவண்னாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்தது. இதில் திருவண்ணாமலை தீப மலை வ உ சி நகரில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 3 வீடுகள் சிக்கி மண்ணில் புதையுண்டன. பெரிய பாறை ஒன்று வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் வீடுகளுக்குள் இருந்த சிறுவன் சிறுமி பெண்கள் என 7 பேர் உயிரிழந்தனர். நேற்று அவர்கள் வீடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று 7 பேரும் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்கள் ராஜ்குமார் ( வயது 32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா ( 12), வினோதினி (14), ரம்யா (12) என 7 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. இவர்கள் 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தன் நெஞ்சை உருக்குவதாக விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+