திருவண்ணாமலை கோயிலுக்கு திடீர்னு வந்த ரோஜா.. கிரிவலம் சென்ற நடிகையின் பின்னால் போவது யார் பாருங்க
திருவண்ணாமலை: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் நடிகையுமான ரோஜா செல்வமணி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பயபக்தியுடன் சாமி கும்பிட்ட ரோஜாவிற்கு ஆள் உயர மாலையை அணிவித்தனர். அங்கு வந்த பக்தர்கள் பலர், ரோஜா உடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் என்பது இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற சிவன் கோவில்களில் ஒன்று. தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற சிவாலயமாக இருக்கிறது. இந்த கோயிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் என பல மாநிலத்தவர்கள் வந்து செல்கிறார்கள்.

ஆந்திராவில் பிரபலம்
இதில் குறிப்பாக ஆந்திரா தெலுங்கானாவைச் சேர்ந்த பலரும் நாள்தோறும் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு எப்படி தமிழர்கள் அதிக அளவில் செல்கிறார்களோ, அந்த அதேபோன்று அண்மைக்காலங்களில் திருவண்ணாமலை கோவிலுக்கு தெலுங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். ஆந்திராவில் உள்ள யூடியூபர்களின் விலாக்ஸ் காரணமாக முன்பைவிட இப்போது திருவண்ணாமலைக்கு வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரோஜாவுக்கு மரியாதை
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் நடிகையுமான ரோஜா செல்வமணி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகை தந்தார். அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவர் கோவில் பிராகரத்தை சுற்றிவந்த நிலையில், ராட்சத மாலை ஒன்றை அணிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர், கோவிலில் அண்ணாமலையாரை பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
அவருக்கு பக்தர்கள் சிலர் புத்தகம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினார்கள். அதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். சிலர் ரோஜா உடன் செல்பி எடுக்கவும், ஓடிச்சென்று கைகொடுக்கவும் ஆர்வம் காட்டினார்கள். அவர்களை புன்னகையுடன் வரவேற்று செல்பிக்கு போஸ் கொடுத்தார். தொடர்ந்து சாமி கும்பிட்ட பின்னர் அங்கிருந்து ரோஜா புறப்பட்டு சென்றார்.
விஜய்க்கு அறிவுரை
முன்னதாக நடிகை ரோஜா சென்னையில் பேட்டி அளிக்கையில் நடிகர் விஜய் பவன் கல்யாண் போல் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்யாமல், ஃபுல் டைம் பாலிடிக்ஸ் செய்ய வேண்டும் என்றும். எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் போல விஜய் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார் நடிகர்கள் கட்சி தொடங்கினால் தன் பின் இருக்கும் தொண்டர்களுக்காக கடைசிவரை சண்டை போட வேண்டும் என்றும் கூறினார்.
இப்போது சினிமாவில் இருந்து வருபவர்கள் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்து வருகிறார்கள் என்றும் சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் கூறினார். சினிமா ஆர்ட்டிஸ்ட் பப்ளிசிட்டி உள்ளது என்றும், அதனால் அவர்கள் செய்யும் கெட்ட காரியங்கள் வெளியாகி விடுகிறது என்றும் தெரிவித்தார்.
-
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications