Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரணியில் அரசு அதிகாரிகளின் கண்ணில் பட்ட 120 பட்டுப்புடவைகள்.. திருவண்ணாமலையில் உடனே நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்தவகையில் திருவண்ணாமலையிலும் பறக்கும் படையினரின் சோதனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், தங்கம் அல்லது பரிசு பொருட்களை கொண்டு செல்கிறார்களா என்பதை கண்டறிய முக்கிய சாலைகள் மற்றும் மாநில எல்லைகளில் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Tiruvannamalai youth case

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சிக்கியுள்ளன.. விருதுநகர் அருகே நடைபெற்ற சோதனையில் சுமார் 14 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் பிடிபட்டன.

மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற வாகனத்தில் இந்த நகைகள் கொண்டு செல்லப்பட்டன.. முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அந்த நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் அதிகாரிகள் சோதனை

மேலும் சாத்தூர் அருகே நடைபெற்ற சோதனையில் சுமார் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 பவுன் தங்க நகைகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற சோதனையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பிடிபட்டன.. நகருக்குள் கொண்டு வரப்பட்ட இந்த நகைகளுக்கும் உரிய ஆவணங்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது..

பணம் மற்றும் நகை மட்டுமின்றி சில்லறை காசுகளும்கூட இந்த சோதனையில் தப்பவில்லை.. தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரளாவிலிருந்து வந்த ஒரு லாரியை சோதனை செய்தபோது, அதில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சில்லறை காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

திருவண்ணாமலை, ஓசூர்

உடனே அது சம்பந்தமான விசாரணையும் நடத்தப்பட்டது.. அப்போதுதான் அவை சபரிமலை ஐயப்பன் கோயில் உண்டியல் காணிக்கை என்றும், அவற்றை நோட்டுகளாக மாற்றுவதற்காக தமிழகத்திற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் உரிய ஆவணங்கள் இருந்தபோதிலும், மேல் விசாரணைக்காக அவை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன..

அதேபோல ஓசூர் பகுதியில் வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்ப சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிலிருந்த 2 கோடியே 34 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்..

இந்த அதிரடி சோதனையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஆரணியில் 120 பட்டுப்புடவைகள்

ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஒரு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.. அதில் சுமார் 65,000 ரூபாய் மதிப்பிலான 120 பட்டுப்புடவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. அந்த புடவைகளை கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் இல்லாத காரணத்தால், அதிகாரிகள் அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்..

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமோ அல்லது 10,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள புதிய பொருட்களையோ கொண்டு செல்லும்போது அதற்குரிய ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 426 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆவணங்கள் இன்றி பிடிபடும் பொருட்கள் அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு, உரிய ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னரே உரிமையாளர்களிடம் திரும்ப அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. தேர்தல் முடியும் வரை இந்த தீவிர கண்காணிப்பு தொடரும் என்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் தொகையையோ அல்லது மதிப்புமிக்க பொருட்களையோ கொண்டு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+