பாஜக நிர்வாகி வீடு இடிப்பு.. திருவண்ணாமலை கோயில் நிலத்தையே ஆக்கிரமித்ததால் அதிரடி! ரூ.50 கோடியாம்
ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி சங்கர், அஜித் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை: அண்ணாமலையில் கோயில் நிலத்தில் 3,800 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த பாஜக நிர்வாகியின் வீடு அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை கண்டித்து போலீசாரை ஒருமையில் பேசிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரத்தை கடந்த 17 ஆம் நூற்றாண்டில் கட்டி முடித்த பெண் சித்தர் அம்மணி அம்மாளும் கட்டுமானப் பணியாளர்களும் தங்குவதற்காக கோயில் வளாகத்தில் 108 தூண் மண்டபத்தில் வசித்தனர்.
அந்த மண்டபத்தை அவரது பக்தர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது. இந்த ஆக்கிரமிப்பு விரிவடைந்துகொண்டே இருந்த நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டில் இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த இடம் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்துக்கே சொந்தம் என்று கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே வழங்கியது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் 3,800 சதுர அடியில் பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் என்பவர் வீடு கட்டி இருந்தார்.

ஆக்கிரமித்த பாஜக நிர்வாகி
2 மாடிகளை கொண்ட வீடு, குடோன், அலுவலகம் ஆகியவற்றை அந்த இடத்தில் கட்டி இருந்தார் சங்கர். இதனை தொடர்ந்து அந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என சங்கரின் மனைவி தீபாவுக்கு அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் நோட்டீஸை அனுப்பி இருந்தது. ஆனால், அதை எதிர்த்து உரிமையையியல் நீதிமன்றத்தில் சங்கர் வழக்கு தொடர்ந்தார்.

ஆதாரம் இல்லை
அதேபோல் அறநிலையத்துறை நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்ற நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையிலும் அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே அவர் தாக்கல் செய்த மனுவில் ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாஜக நிர்வாகி வீடு
அதை தொடர்ந்து பாஜக நிர்வாகி 3,800 சதுர அடி பரப்பளவில் கட்டி இருந்த வீடும் அவரது அலுவலகமும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிலையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அம்மணி அம்மாள் தங்கி இருந்த 108 தூண் மண்டபமும் இடிக்கப்பட்டது.

ஒருமையில் பேசிய பாஜக நிர்வாகி
இதற்கிடையே அம்மணி அம்மாள் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து அங்கு வீடு கட்டி இருந்த பாஜக நிர்வாகி சங்கர் காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்போது அத்துமீறி கோயில் இடத்திற்குள் நுழைந்ததாக கூறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஏழுமலை, கார்த்திகேயன், காளியப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பாஜக நிர்வாகி தலைமறைவு
இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி சங்கர், அஜித் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் திருவண்ணாமலை கோயில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications