கைக்குழந்தையுடன் காதலில் விழுந்த இளம் மனைவி! 2 வயசு பிஞ்சுக்கு நேர்ந்த கதி.. அதிர்ந்த கணவன்!
திருவண்ணாமலை: ஆரணி அருகே கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த இளம்பெண்ணின் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண்ணின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடித்துவிட்டு தினமும் கலாட்டா செய்து வந்த நிலையில் கடந்த மாதம் திடீரென குழந்தையை ஆண் நண்பர் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குழந்தை கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

காதல் திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காங்கரனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அதே மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த குணசேகரன் என்பவருக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலை வீட்டில் தெரிவிக்கவே பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருக்கையில் திடீரென இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு வந்திருக்கிறது.

மீண்டும் காதல்
அந்த சமயத்தில்தான் ஜெயசுதாவுக்கு அவரது உறவினரான மாணிக்கம் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குணசேகரனை விட்டு பிரிந்த ஜெயசுதா தனியாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த தனிமை மாணிக்கத்திற்கும், ஜெயசுதாவுக்கும் இடையேயான நெருக்கமாக மாறியுள்ளது. ஏற்கெனவே நண்பர்களாக பழகிய இவர்கள் பின்னர் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதில் மாணிக்கத்திற்கு ஏற்கெனவே திணமாகி ஒரு பெண் குழந்தை இருந்திருக்கிறது. ஆனாலும் இந்த காதல் திருமணத்தை தாண்டிய உறவாக இது வளர்ந்துள்ளது.

சச்சரவு
பின்னர் சில நாட்களில் ஜெயசுதா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்ததை போல தெரிந்தாலும், மாணிக்கம் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்துகொண்டிருந்தார். மறுபுறம் மாணிக்கத்தின் வீட்டிலிருந்தும் பிரச்னைகள் கிளம்பின. அதாவது, மாணிக்கத்தின் மனைவி ஜெயசுதாவின் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். ஆக தினம் தினம் ஏதேனும் ஒரு பஞ்சாயத்து வந்தவண்ணம் இருந்துள்ளது.

தாக்குதல்
மாணிக்கம் இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று குடித்துவிட்டு வந்து அடிக்கடி சண்டை போட்டுள்ளார். எனவே குழந்தையை எங்காவது விட்டுவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று ஜெயசுதா மறுத்துள்ளார். இப்படி இருக்க, கடந்த மாதம் 21ம் தேதி மாணிக்கம் குழந்தையை கட்டையால் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை துடிதுடித்து மயங்கி விழுந்துள்ளது. ஜெயசுதா உடனடியாக குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

கொலை
அங்கு குழந்தைக்கு தையல் போடப்பட்டுள்ளது. ஆனாலும் உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாததால் குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத ஜெயசுதா அதிர்ச்சியில் உறைந்துபோனார். பின்னர் மாணிக்கம் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மாணிக்கத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவால் 2 வயது குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆரணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications