இல்லம் தேடிக் கல்வி! 2 லட்சமாவது மையத்தை திருவண்ணாமலையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
திருவண்ணாமலை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
Recommended Video
திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பங்கேற்றார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே 2 லட்சமாவது மையம் தொடங்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இல்லம் தேடிக் கல்வி
கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவை வழங்கப்பட்டது.

தன்னார்வலர்கள்
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக இதுவரை 7.26 லட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு லட்சம் தன்னார்வலர்கள் கற்பிக்கும் சேவையை வழங்கி வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 34 லட்சம் மாணவர்கள் பாடம் கற்று வருகின்றனர். ஆரம்பத்தில் சுமாராக இருந்த இந்த திட்டம் இப்போது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
இதற்கு காரணம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இடைவிடாத தொடர் நடவடிக்கைகள் ஆகும். இதனிடையே இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் 2 லட்சமாவது மையம் திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் நண்பகல் 12 மணியளவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் புதிய மையத்தை தொடங்கி வைத்தார்.

காணொலி வெளியீடு
மேலும், இல்லம் தேடிக் கல்வி தொடர்பாக காணொலி ஒன்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தொடர் வாசிப்பு இறுதிப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு கோப்பைகள் வழங்கி புகைப்பட புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, கீழ் பென்னாத்தூர் சோமாசிபாடி கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உள்ளடக்கிய இல்லப் பராமரிப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications