"புஷ்பா புருஷன்கள்".. உதயசூரியன் கழுத்தை பிடிக்க.. பாண்டியன் காலை பிடிக்க.. பாவம், உயிரே போச்சே..!
கணவனை கொன்ற மனைவி உட்பட 3 பேரை தி.மலை போலீசார் கைது செய்துள்ளனர்
திருவண்ணாமலை: ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதலர்களுடன் பழகி வந்த ராஜேஸ்வரி, கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.. ஒரு அப்பாவி உயிர் இதில் காவு வாங்கப்பட்டுள்ளது..!!
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்துள்ளது கடுகனூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் லட்சுமிகாந்த்.. 41 வயதாகிறது. இவர் ஒரு விவசாயி.. மனைவி பெயர் ராஜேஸ்வரி.. 31 வயதாகிறது.. இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.
கடந்த 27ம் தேதி அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் லட்சுமிகாந்த் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. உடம்பெல்லாம் கத்திக்குத்து காயங்கள் கிடந்தன.. தகவலறிந்த பெரணமல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தினர்.

2 கள்ளக்காதல்
அப்போதுதான், கனகம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த உதயசூரியன் என்பவர் சிக்கினார்.. இவருக்கு 27 வயதாகிறது.. விசாரணையில், இவர்தான் லட்சுமிகாந்த்தை கொன்றது தெரியவந்தது.. இவருக்கு உதவியாக, பாண்டியன் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்... கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவித்ததாவது: திருமணத்திற்கு முன்பு, அதே கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரை ராஜேஸ்வரி காதலித்து வந்துள்ளார்.. ஆனால், வீட்டில் இவர்களின் காதலை ஏற்காத நிலையில், உறவினர் லட்சுமி காந்தனுக்கு ராஜேஸ்வரியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

கம்பெனி
ஆனாலும், ராஜேஸ்வரியால் சிவக்குமாரை மறக்க முடியவில்லை.. எனவே, திருமணத்துக்கு பிறகும் கள்ளத்தொடர்பு நீடித்து வந்துள்ளது.. இதனிடையே, ராஜேஸ்வரி செய்யார் சிப்காட் ஷூ கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.. அங்கே சூப்பர்வைசராக வேலை செய்து கொண்டிருந்த உதயசூரியன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.. இதுவே கள்ளக்காதலாக உருமாறியது.. சிவக்குமார், உதயசூரியன் என 2 கள்ளக்காதலர்களுடன் ஒரே நேரத்தில் உறவாடி வந்துள்ளார் ராஜேஸ்வரி.. இதை பற்றி கள்ளக்காதலர்கள் 2 பேருக்குமே தெரியாது.. ராஜேஸ்வரியை 2 பேருமே அதிகமாக நம்பினார்கள்.

நிம்மதி
ஒருகட்டத்தில், ராஜேஸ்வரியின் நடத்தையில் கணவர் லட்சுமிகாந்தனுக்கு மாற்றம் தெரிந்தது.. அனால், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.. இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, கணவனை கொன்றால்தான் நிம்மதி என்ற முடிவுக்கு வந்தார்.. அதனால், 2 கள்ளக்காதலர்களில் யாரை வைத்து, கணவனை கொல்வது என்று யோசித்தார்.. உதயசூரியன் தன் மீது பைத்தியமாக இருக்கவும், கணவரை கொலை செய்ய அவரையே தேர்ந்தெடுத்தார். கணவரை தீர்த்து கட்டினால்தான், நிம்மதியாக வாழ முடியும் என்று உதயசூரியனிடம் சொல்லவும், அதற்கு உதயசூரியன் ஒப்புக் கொண்டார்..

உதயசூரியன்
தன்னுடைய கணவனுக்கு உதயசூரியனை அறிமுகம் செய்து வைத்தார் ராஜேஸ்வரி.. இருவரும் நட்பாக பழகியுள்ளனர். இருவருமே சேர்ந்து தண்ணி அடிக்கும் அளவுக்கு நட்பு வளர்ந்தது.. லட்சுமிகாந்துடன் நட்பாக இருந்து கொண்டு, அவர் குழந்தைகளுடனும் உதயசூரியன் அன்பாக பழகுவதுபோல் நடித்துள்ளார். இதற்கு நடுவில் வீட்டில் யாருமில்லாத நேரத்திலும் ராஜேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்து வந்தார். பார்க்க அடிக்கடி வந்து சென்றுள்ளார். கடந்த 23ம்தேதி உறவினர் பாண்டியன் என்பவருடன் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்த உதயசூரியன், லட்சுமிகாந்தை அழைத்துக்கொண்டு மது அருந்த சென்றுள்ளார்...

காலை பிடித்தனர்
மதுக்கடையில் மதுபானத்தை வாங்கிக்கொண்டு, அருகில் உள்ள வயலில் அமர்ந்து 3 பேரும் குடித்துள்ளனர். லட்சுமிகாந்த்துக்கு அதிகளவு மதுவை தந்து, போதையில் மயங்க செய்துள்ளார்கள்.. கையோடு கொண்டு வந்திருந்த கயிற்றால் லட்சுமிகாந்த் கழுத்தில் போட்டு இறுக்கினார் உதயசூரியன்.. அப்போது லட்சுமிகாந்த்தின் கால்களை பாண்டியன் பிடித்து கொண்டாராம்.. லட்சுமிகாட்ந்த் அப்போதே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார்.. ஆனாலும், சந்தேகம் தீரவில்லை என்று கையில் இருந்த கத்தியால் லட்சுமி காந்தின் கழுத்தை அறுத்துள்ளனர்..

முள்செடி
பிறகு, அருகில் இருந்த முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர் என்று போலுசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இப்போது ராஜேஸ்வரி உட்பட 3 பேரையுமே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. கணவனையே கொலை செய்த மனைவியை நினைத்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியானதைவிட, நான் இருக்கும்போதே இன்னொரு கள்ளக்காதலனா? முதல் கள்ளக்காதலன் சிவக்குமார்தான் அதற்கு மேல் அதிர்ச்சியில் உள்ளாராம்..!!!












Click it and Unblock the Notifications