Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்ப பார்த்தாலும் அசிங்கமா பேச்சு.. ஆவேசமான மருமகள்.. மாமியார் படுகொலை.. துரத்தி பிடித்த போலீஸ்!

மாமியாரை மருமகள் இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாமியாரை கொன்றுவிட்டு தப்பியோடிய மருமகள்... துரத்தி பிடித்த போலீஸ்!-வீடியோ

    திருவண்ணாமலை: வாயை திறந்தாலே முனியம்மாளுக்கு ஆபாச பேச்சுதான்.. இதனால் பொறுமை இழந்த மருமகள் மாமியார் மீது சுடு தண்ணீரை ஊற்றி, இரும்பு கம்பியால் அடித்தேகொன்றுவிட்டார்.

    திருவண்ணாமலை மாவட்டம் சித்தாலபாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். 55 வயதாகிறது. இவரது மகன் வெங்கடேசன் ஒரு கல்குவாரியில் வேலை பார்க்கிறார்.

    Daughter in law killed mother in law near Thiruvannamalai

    ஜோதி என்ற பெண்ணை முனியம்மாள்தான் பார்த்து சில வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து வைத்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முனியம்மாள் கணவனை இழந்தவர் என்பதால், மகன், மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

    ஆனால், முனியம்மாளுக்கும், ஜோதிக்கும் கொஞ்சமும் ஒத்து போகவில்லை. தினமும் சண்டை, தகராறு வந்து கொண்டே இருந்தது. இந்த சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றும் இருக்கிறது. குறிப்பாக முனியம்மாள்தான் புசுக் புசுக்கென்று ஸ்டேஷனில் போய் ஜோதி மீது புகார் சொல்வார். போலீசாரும், மாமியார் - மருமகளை சமாதானம் செய்து வைப்பார்கள்.

    இந்நிலையில் சம்பவதன்றும் இதேபோல சண்டை வந்துவிட்டது. மாடு கட்டுவதில் பிரச்சனை வந்தது. ஜோதி சரியாக மாட்டை இழுத்து பிடித்து கட்டவில்லையாம். அதற்கு அசிங்க அசிங்கமாக திட்டி உள்ளார் முனியம்மாள். எப்பவுமே இப்படி அறுவெறுக்கத்தக்க வகையில் பேசிவந்ததால், ஜோதிக்கு கடுப்பு ஆனது.

    அதனால், நள்ளிரவு வரை காத்திருந்தார். தூங்கி கொண்டிருந்த முனியம்மாள் மீது, வெந்நீரை காய வைத்து கொண்டு வந்து ஊற்றினார். இதில் சுடுநீர் பட்டு முனியம்மாள் அலறி கத்தினார். இப்படி சத்தம் போட்டதும் ஜோதி பயந்துவிட்டார்.

    அக்கம்பக்கத்தினர் வந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து, பக்கத்தில் கிடந்த இரும்பு கம்பியை தூக்கி முனியம்மாள் தலையிலேயே அடித்தார். இதில் மண்டை உடைந்து முனியம்மாள் அங்கேயே உயிரிழந்தார். பிறகு உடனடியாக வாலாஜாபாத்தில் தன் அம்மா வீட்டிற்கு ஜோதி தப்பி சென்றுவிட்டார். எனினும், தூசி போலீசார் விரட்டி சென்று ஜோதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+