தொங்காதீங்கடா டேய்.. திருவண்ணாமலையில் துளிர்க்கும் தாமரை? பாஜகன்னாலே நியாயம்.. ஆமா, அந்த அக்கா யாரு?
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாஜக மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் தொகுதி மக்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் பாஜக தனித்து களம் காண்கிறது.. திராவிட கட்சிகளின் ஆதரவில்லாமல், தனித்து கூட்டணி வைத்து, ரிஸ்க் எடுத்துள்ளது.. எப்படியாவது 10 தாமரைகளை டெல்லிக்கு அனுப்பிவிட வேண்டும், வாக்கு சதவீதத்தை ஓரளவாவது உயர்த்திவிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது. இதற்காக பிரச்சாரங்களில் முனைப்பு காட்டியும் வருகிறது.

அதிரடி: அந்தவகையில், பாஜகவுக்காக பல்வேறு பிரமுகர்களும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். இதில் பிரபல நடிகர் கூல் சுரேஷூம் ஒருவர்.
எல்லாரையும்விட வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார் கூல் சுரேஷ். இதற்காக தான் பிரச்சாரம் மேற்கொள்ளும் திருவண்ணாமலை தொகுதியில், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து தினுசு தினுசாக வாக்கு சேகரித்து வருகிறார். ஏதாவது வித்யாசமாக செய்ய வேண்டும் என்பதற்காகவே தினம் தினம் மெனக்கட்டு வருகிறார்.
காய்கறிகள்: காய்கறி மற்றும் பூக்கடையில் வியாபாரம் செய்தார்.. காய்கறி கடைகளில் நுழைந்து, அங்கு வரும் பொதுமக்களுக்கு பொரி கடலை விற்பனை செய்தார்.. காய்கறிகளை எடை போட்டு தந்து வாக்குகளை சேகரித்தார். தர்பூசணி, ஐஸ்கிரீம் கடை என ஒன்றுவிடாமல் அனைத்தையும் கூவி கூவி விற்று பொதுமக்களை அழைத்து வியாபாரம் செய்து வருகிறார்..
பொரிகடையில், பொரி வாங்குவதற்காக ஒருவர் வந்தார்.. அவரிடம், இந்த பொரியில் கடலை உள்ளிட்ட சத்தான பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன... அதுமாதிரிதான் பாஜக கூட்டணியிலும் மக்கள் நலன் சார்ந்த பல பல கட்சிகள் உள்ளன... அந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
பூக்கடை: பிறகு பூ விற்பதற்காக பூக்கடைக்குள் நுழைந்தார். ஆனால், அந்த நேரம்பார்த்து யாருமே பூ வாங்க வரவில்லை.. அப்போது சுரேஷூடன் பிரச்சாரத்துக்கு வந்திருந்த பாஜக நிர்வாகி ஒருவர், சட்டென கஸ்டமராக மாறினார்.
பூ விலை எவ்வளவுங்க? என்று கேட்டார்.. உடனே சுரேஷ், இப்ப 100 ரூபாய்க்கு விற்கும் ஒரு முழம், பாஜக ஜெயிச்சா 25 ரூபாய்க்கு விற்கப்படும்.. பாஜக ஆட்சியிலே எல்லாமே நியாயமான விலைதான் என்று கூல் சுரேஷ் புது குண்டை தூக்கி போட்டார்.
அக்கா: சுட்டெரிக்கும் வெயிலில் திறந்த வெளி ஜீப்பில் ஒவ்வொரு தெருவுக்குள்ளும் நுழைந்து ஓட்டு கேட்டு வருகிறார். அப்போது அங்கிருந்த ஒரு அக்கா, சுரேஷுக்கு டீ கொண்டுவந்து தந்தார்..
"அக்கா, இது வெறும் டீ கிடையாது.. இந்த டீயில் அன்பு - பண்பு - பாசம் எல்லாவற்றையும் கலந்து தந்திருக்கீங்க" என்று சொல்லி டீயை வாங்கி குடிப்பதற்கு போன கூல் சுரேஷ், "வெந்து தணிந்தது காடு - அக்கா கொடுத்த டீயை போடு" என்று தன்னுடைய பஞ்ச் சொல்லிவிட்டு, டீயை குடித்தார்.
மாணவர்கள் : கூல் சுரேஷ் இப்படி பேசிக்கொண்டிருந்தபோதே அந்த வழியாக ஒரு டவுன் பஸ் சென்றது.. அதில் மாணவர்களும், இளைஞர்களும் தொங்கியபடி சென்றார்கள்..
இதனை பார்த்த கூல் சுரேஷ், "டேய் டேய் தொங்காதீங்கடா.. தொங்காதீங்கடா.. உங்கள் வாழ்க்கை முக்கியம்.. உங்க அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் உங்க வாழ்க்கையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், தொங்காதீங்கடா பசங்களா" என்று கேட்டுக் கொண்டார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications