ஜஸ்ட் மிஸ்.. ரயில் லோகோ பைலட்டே இறங்கி வந்து கேட்டை மூடிவிட்டு சென்றதால் பரபரத்த திருவண்ணாமலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை - திருக்கோவில் இடையே, ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட்டை திறந்து வைத்து இருந்த கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரயில் வரும் போது கேட்டை அடைக்காமல், அலட்சியமாக செயல்பட்ட காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நாகர்கோவிலில் இருந்து கட்சிக்கோடோ நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது கேட் கீப்பர் கேட்டை அடைக்காமல் இருந்துள்ளார். இது குறித்து ரயில் லோகோ பைலட் அளித்த புகாரின் பேரில் கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை ரயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிந்து வந்தவர் ராமு. இவர் வழக்கம் போல் நேற்றும் பணியில் இருந்தார். அப்போது நாகர்கோவிலில் இருந்து ஆந்திரா மாநிலம் கட்சிக்கோடோ நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்றது.

அந்த ரயில் தண்டரை ரயில் நிலையம் அருகே வந்த போது, ராமு பணியில் இருந்த ரயில்வே கேட் அருகே வந்தபோது ரயில்வே கேட் திறந்து இருந்தது. இதை கவனித்த எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலர் ஹாரன் அடித்து தெரியப்படுத்தி இருக்கிறார். இதற்கு பிறகு தான் ராமு ரயில்வே கேட்டை அடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த ரயில் புறப்பட்டு சென்றது. எனினும் பணியில் அலட்சியமாக செயல்பட்டது குறித்து எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் ரயில்வேக்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்பேரில் கேட் கீப்பர் ராமுவை சஸ்பெண்ட் செய்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடலூரில் திறந்து இருந்த ரயில்வே கேட்டினால், அவ்வழியாக சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 3 பள்ளி மாணவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications