தங்க நகையை அடகு வைக்க திருவண்ணாமலை வங்கிக்கு போன புனிதா, சுமதி.. ஜோடியாக சிக்கி.. ஒரே அசிங்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த புனிதா (வயது 39), வேலூர் பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த சுமதி (42). இவர்கள் இருவரும் நகைகளை அடகு வைப்பதற்காக திருவ்ண்ணாமலை மாவட்டம் அழகுசேனை கிராமத்தில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் 22 கிராம் எடைகொண்ட நகைகளை வங்கி மேலாளரிடம் கொடுத்தனர். அப்போது அவர்கள் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
வங்கிகள் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்து கடன் பெறுவதற்காக போலி நகைகளை அடகு வைப்பது இப்போது அதிகரித்து வருகிறது. சிலர் தெரிந்தே போலி நகைகளை கொடுத்து, வங்கி ஊழியர்களின் துணையுடன் கோடிகளில் மோசடி செய்கிறார்கள். இவர்களும் வங்கி ஊழியர்களும், வங்கிகளின் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது தான் சிக்கி கொள்கிறார்கள். அதேநேரம் போலி நகையை அடகு வைத்து வங்கியில் பணம் பெற முயலுபவர்களே, அன்றே வங்கியில் சிக்கி சிறை செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இப்படி போலி நகையை அடகு வைக்க செல்பவர்கள், நகைகளில் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகைகளையே எடுத்து செல்வரக்ள். அடகு வைக்கும் நபர், இந்த நகைகளை உண்மையான தங்கம் போல நகை மதிப்பீட்டாளரிடம் (Appraiser) கொடுத்து கடன் பெற முயற்சிப்பார்கள்.
அவர் நகையை பார்த்தே பெரும்பாலும் அடையாளம் கண்டுவிடுவார். எனினும் உரசி பார்த்தே தங்கத்தின் தரத்தை உறுதி செய்வார். அதன்பிறகே தங்க நகைக்கு பணம் தருவார் 20 கேரட் என்றால் ஒரு தொகையு 22 கேரட் என்றால் அதிக தொகையும் கிடைக்கும். கேடிஎம் முத்திரை, 916 முத்திரை இல்லை என்றால், அந்த நகைகளை கடுமையாக பரிசோதித்தே நகைக்கடன் வழங்குவார் நகை மதிப்பீட்டாளர்.
அதேநேரம் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்து கடன் பெறுவதும் நடப்பது அதிகமாக இருக்கிறது. அதற்கான அடையாளத்தை உறுதிப்படுத்தப் போலியான ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தும் சம்பவங்களும் நடக்கிறது. அதேபோல் வேறு ஒருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்து திருட்டு நகைகளை அடகு வைத்து கடன் பெறுவதும் அடிக்கடி நடக்கிறது. இறுதியில் போலீசார் கண்டுபிடித்து நகைகளை மீட்கிறார்கள். திருவண்ணாமலையில் தங்க நகை அடகு மோசடி நூதன முறையில் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த புனிதா (வயது 39), வேலூர் பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த சுமதி (42). இவர்கள் இருவரும் நகைகளை அடகு வைப்பதற்காக திருவ்ண்ணாமலை மாவட்டம் அழகுசேனை கிராமத்தில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் 22 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை வங்கி மேலாளரிடம் கொடுத்தனர். தொடர்ந்து நகைகளை சோதனை செய்து பார்த்த போது, போலி நகைகள் என்பது அவருக்கு தெரியவந்தது. அவர் உடனே போலீசுக்கு புகார் அளித்தார். இதன் பேரில் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து புனிதா, சுமதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications