அண்ணாமலை டக்குனு கண்டுபிடிச்சிட்டாரு! திமுக பின்வாங்கிட்டு பார்த்தீங்களா! விளாசும் எச். ராஜா!
திருவண்ணாமலை: ஊழல் நடக்கும்போதே எங்களின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டுபிடித்துவிடுவதால், திமுக அரசு பின்வாங்கி, முடிவை மாற்றிவிடுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், அதன் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் முக்கிய தலைவரான எச்.ராஜா பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் சாதனை, தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடு, திமுக அரசு மீதான விமர்சனம் உள்ளிட்ட ஏராளமானவற்றை பற்றி எச்.ராஜா பேசினார்.
உ.பி. பாஜக அரசால் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பாஜக சாதனை
இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, யாரும் நிறைவேற்றாத, நிறைவேற்றவே முடியாது என்று நினைக்கும் விஷயங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவிய கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடித்ததோடு, அதனை இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களுக்கு மத்திய இலவசமாக வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

திமுக அரசில் ஊழல்
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்றது வருகிறது. பல மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் ஊழல் நடக்கும் போதே எங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டுபிடித்துவிடுகிறார். வரும் முன் காப்போம் என்று செயல்பட்டு வருவதால், தமிழக அரசு பின்வாங்கி, முடிவை மாற்றிவிடுகிறது என்று விமர்சித்துள்ளார்.

திமுகவுக்கு எதிர் பாஜக
தொடர்ந்து, திமுகவுக்கு சித்தாந்த ரீதியாக கடுமையான எதிர்ப்பை காட்டிவரும் கட்சி பாஜக தான். கோயில் விவகாரங்களில் தமிழக அரசு மிகவும் மோசமாக நடந்துகொள்கிறது. கோயில் நகைகளை உருக்குவது, திருடுவதற்கு சமம். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கருணாநிதிக்கு சிலை வைப்பதை பாஜக ஏற்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்று ஹெச்.ராஜா கூறினார்.

லாக்கப் மரணங்கள்
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின், இதுவரை 7 பேர் லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. காவல்துறை இருக்கிறதா என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சென்னையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து திமுக அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.