Tiruvannamalai: திருவண்ணாமலை மலை உறுதிதன்மை குறைந்துவிட்டதாக.. அமைச்சர் எவ வேலு தகவல்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது என்று ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து கூறியதாக அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார். கார்த்தை தீபத் திருநாளன்று மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த பின்னரே மலை மீது பக்தர்கள் அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 24ஆம் தேதி தொடங்கும் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 3ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. கார்த்திகை தீபத் திருநாள் மாலையன்று 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையின் உச்சத்தில் மகா தீபம் ஏற்றப்படும்.

EV Velu Tiruvannamalai Karthigai Deepam

திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் சென்று மகா தீபத்தை தரிசிக்கவும், மலை மீது சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் ஆன்லைன் மூலமாக முன் பதிவு செய்ய வேண்டும். காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும், மாலையில் மலை மீது ஏற்றப்படும் மகாதீபத்தையும் தரிசிப்பதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் அமைச்சர் எவ வேலு மற்றும் சேகர்பாபு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்ற ஆண்டு பெரிய மழை வந்ததால் ஈரப்பதம் அதிகமாகியது. அப்போது ஐஐடி நிபுணர்கள் வந்து, மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது.. கொழ கொழ என்று மண்ணாகிவிட்டதால் பாறை இறங்கிவிட்டது என்றார்கள். இதனால் பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு யாரையும் மலை மீது அனுமதிக்கவில்லை.

இன்று காலை கூட மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழை தொடருமா என்பது தெரியாது. அதனால் தீபத் திருநாளன்று மலையின் உறுதித்தன்மை உறுதி செய்த பின்னரே, பக்தர்களை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை சொல்ல முடியும். எனக்கு தெரிந்து இந்த மலை சரிந்ததே இல்லை.. கடந்த ஆண்டுதான் முதல்முறையாக சரிந்தது.

அதனால் ஐஐடி நிபுணர்களை ஆய்வுக்கு அழைத்து வந்தேன். அப்போது அவர்கள் ஆய்வு செய்துவிட்டு, எங்கு பார்த்தாலும் மண்ணும், கல்லுமாய் இருக்கிறது.. அதனால் அனுமதிக்க கூடாது என்று என்றார்கள். இதனால் தீபத் திருநாள் அன்று மலையின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். Tiruvannamalai Girivalam மிகவும் பிரசித்தி பெற்றது. மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு இவ்வாறு கூறியுள்ளது பக்தர்களிடையே விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+