வம்பிழுத்த இளைஞர்! ஓடிஓடி தாக்கிய திருநங்கைகள்! போலீஸ் முன் திடீரென டிரஸை அவிழ்த்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை: செங்கம் பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் வம்பிழுத்த இளைஞரை விரட்டி விரட்டி உருட்டுக்கட்டையால் திருநங்கைகள் கொடூரமாக தாக்கிய நிலையில் அதனை தடுக்க முயன்ற போலீசார் முன்பு ஆடையை அவிழ்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய பஸ் நிலையமாக செங்கம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் திருநங்கைகள் சிலர் நின்றனர். இந்த வேளையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் திருநங்கைகளிடம் பிரச்சனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இளைஞர் ஒருவர் போதையில் பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். அவர் திருநங்கைகளை பார்த்ததும் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் பணம் கொடுக்க முடியாது எனக்கூறியதோடு இடத்தை காலி செய்யும்படி கூறியுள்ளனர்.
ஆனால் இளைஞர் அங்கிருந்து செல்லவில்லை. மாறாக திருநங்கைகளிடம் பணம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே அங்கிருந்த திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து பக்கத்தில் கிடந்த உருட்டுக்கட்டையை கையில் எடுத்து இளைஞரை தாக்க முயன்றனர்.
இதனால் பயந்துபோன இளைஞர் அங்கிருந்து ஓடினார். ஆனால் திருநங்கைகள் விடவில்லை. அவரை பின்தொடர்ந்து சென்று விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கினார். பஸ் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் இருந்த நிலையில் திருநங்கைகள் இளைஞரை விரட்டி விரட்டி தாக்கினர். இதனை அங்கிருந்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசார் இளைஞரை மீட்க முயன்றனர். ஆனாலும் திருநங்கைகள், இளைஞரை சரமாரியாக தாக்கினர். ஒரு கட்டத்தில் போலீசார் திருநங்கைகளை தடுத்து இளைஞரை மீட்டனர். அப்போது கோபமடைந்த திரநங்கை ஒருவர் தனது ஆடையை கழற்றி நிர்வாணமாக முயன்றார். இந்த சம்பவம் செங்கம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக போலீசார் இளைஞரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே செங்கம் பஸ் நிலையத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications