திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் எழுந்து நிற்கும் கருணாநிதி.. சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருவண்ணாமலை சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், திருவண்ணாமலை - வேலூர் சாலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவாயில் மற்றும் கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை இன்று திறந்துவைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று திருவண்ணாமலை சென்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மேளதாளத்துடன் வரவேற்றனர்.
திருவண்ணாமலை போளூர் சாலையில் புதியதாக பிரம்மாண்டமாக கட்டபட்ட அறிஞர் அண்ணா நுழைவாயிலை தமிழக முதல்வர் திறந்து வைத்து. மேலும் அண்ணா நுழைவாயில் அருகே உள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 8அடி உயரம் கொண்ட சிலையை தமிழக முதல்வர் @mkstalin திறந்து வைத்தார். @SRajaJourno @abpnadu pic.twitter.com/kqG3DN350a
— Vinoth (@Vinoth05503970) July 8, 2022
இதைத்தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இது தமிழகத்தில் 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிவாச்சாரியார்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடைகள், பொருட்களை வழங்கினார்.
திருவண்ணாமலை போளூர் சாலையில் புதியதாக பிரம்மாண்டமாக கட்டபட்ட அறிஞர் அண்ணா நுழைவாயிலை தமிழக முதல்வர் திறந்து வைத்து. மேலும் அண்ணா நுழைவாயில் அருகே உள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 8அடி உயரம் கொண்ட சிலையை தமிழக முதல்வர் @mkstalin திறந்து வைத்தார். @SRajaJourno @abpnadu pic.twitter.com/kqG3DN350a
— Vinoth (@Vinoth05503970) July 8, 2022
இதையடுத்து திருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவுவாயிலை திறந்து வைத்தார். தொடர்ந்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார்.
கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் சிலை 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பீடம் 13 அரை அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications