விஸ்வரூபம்- திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க கோரி அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆகப் பிரிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது பாமகவின் நீண்டகால கோரிக்கை. திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்கள்தொகை 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 24 லட்சத்து 64 ஆயிரத்து 875 ஆகும். இன்றைய நிலையில் மக்கள்தொகை 27 லட்சத்தைக் கடந்திருக்கக் கூடும். தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை வளங்களும், வேளாண்மையும் சிறப்பாக இருக்கும் போதிலும், வளர்ச்சி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம் மாவட்டம் மிகவும் பரந்து விரிந்து காணப்படுவது தான். நிலப்பரப்பின் அடிப்படையில் பார்த்தால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு (6286 ச.கிமீ) அடுத்தபடியாக 6188 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இது சென்னையை விட 15 மடங்கு அதிகமாகும். ஆனாலும், கடந்த 34 ஆண்டுகளாக இது ஒரே மாவட்டமாக தொடர்கிறது. மாவட்டத்தில் ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு 158 கி.மீ பயணிக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்கள் உள்ளன. 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இரு மக்களவைத் தொகுதிகள் இந்த மாவட்டத்தில் வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் தனி நாடாக அறிவிக்கப்பட்டால் உலகின் 143&ஆவது பெரிய நாடாக இருக்கும். பஹ்ரைன், மொரிஷியஸ், பூடான் போன்ற 92 நாடுகளை விட அதிக மக்கள்தொகை கொண்டதாக இருக்கும். இவ்வளவு பெரிய மாவட்டத்தை ஒரு மாவட்ட ஆட்சியர் நிர்வகிப்பதும், வளர்ச்சித் திட்டப் பணிகளை திறம்பட செயல்படுத்துவதும் சாத்தியமல்ல. 27 லட்சம் மக்களின் தேவைகளை நிச்சயமாக ஓர் அதிகாரியால் நிறைவேற்ற முடியாது. பெரிய மாவட்டமாக இருப்பதால் திருவண்ணாமலை எதிர்கொள்ளும் இன்னொரு சிக்கல், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான தனிநபர் ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருப்பதாகும். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது மட்டும் தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications