கணவருடன் பைக்கில் வந்த கமலி டீச்சர்.. எதிர்பாராமல் நடந்த விபத்து.. நிமிடத்தில் நடந்தேறிய சோகம்
பைக் விபத்தில் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்
திருவண்ணாமலை: தேர்தல் வேலையை முடித்துவிட்டு, பைக்கில் கணவனுடன் சென்று கொண்டிருந்தார் டீச்சர் முத்துகமலி.. எதிர்பாராமல் கீழே விழுந்தவர் இப்படி அநியாயமாக உயிரிழந்துவிடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
செங்கத்தை அடுத்துள்ளது மேல்புழுதியூர் அரசு நடுநிலைப்பள்ளி.. இங்கு டீச்சராக வேலை பார்த்து வந்தவர் முத்துகமலி.. 30 வயதாகிறது.. நெல்லையை சேர்ந்தவர்!

இவர் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு தேர்தல் பணிக்காக சென்றிருந்தார். தேர்தல் பணியை முடித்துவிட்டு அடுத்த நாள் காலை கணவர் விஜயகுமாருடன் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வளையாம்பட்டு அடுத்த குமாரசாமிபாளையத்தில் இவர்களது வீடு உள்ளது.
வளையாம்பட்டு ரோட்டில் பைக்கில் சென்றபோது, திடீரென அங்கிருந்த வளைவில் திரும்பி உள்ளனர்.. அப்போது திடீரென தடுமாறி 2 பேருமே கீழே விழுந்துவிட்டனர்.. இதில் முத்துகமலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனால், உடனடியாக செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.. பின்னர் அங்கிருந்து புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இத்தனை ஆஸ்பத்திரிகளில் தீவிரமாக சிகிச்சை அளித்தும், பலனின்றி டீச்சர் முத்துகமலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேசாக தலையில் அடிபட்டுள்ளது என்றுதான் ஆரம்பத்தில் குடும்பத்தினர் நினைத்தனர்.. ஆனால், அநியாயமாக உயிரிழந்த டீச்சரின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்துவிட்டது. டீச்சருக்கு ஒன்றவரை வயதில் பெண் குழந்தை உள்ளதாம்..இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications