திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்துக்கு போக போறீங்களா? சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மறுநாள் 28ஆம் தேதி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வர உள்ளனர்.

பௌா்ணமி கிரிவலத்தையொட்டி பக்தா்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அக். 28, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அக்டோபர் 28, 29 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், நள்ளிரவு 12.05க்கு திருவண்ணாமலைக்குச் சென்றடைகிறது. அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரையை 9.05 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஐப்பசி பௌர்ணமி கிரிவலத்திற்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை மறுநாள் சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலுார், பண்ருட்டி, திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளன.












Click it and Unblock the Notifications