திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்லைன் ரம்மிக்கு தடை.. அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும் -அன்புமணி வலியுறுத்தல்!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்யும் அரசின் தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், இதற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திருவண்ணாமலை அடுத்த வேடியப்பனூர் பகுதியில் இன்று நடைபெற்ற வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் கலந்துறையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், நந்தன் கால்வாய் திட்டத்திற்கு பல கட்ட போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. இந்த நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டத்தினை உடனடியாக தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும்.

பத்திரகாளி பிள்ளைகளும்.. திரௌபதி பிள்ளைகளும்! நாடார் மாநாட்டில் அன்புமணி! கிளம்பும் யூகங்கள்! பத்திரகாளி பிள்ளைகளும்.. திரௌபதி பிள்ளைகளும்! நாடார் மாநாட்டில் அன்புமணி! கிளம்பும் யூகங்கள்!

நந்தன் கால்வாய்

நந்தன் கால்வாய்

மேலும், நந்தன் கால்வாய்யுடன் தென்பெண்ணையாற்றை இணைக்க வேண்டும். இதனால் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயனடைவார்கள். இந்த ஆண்டு மட்டும் தென்பெண்ணையாற்றில் 20 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. ஆகவே, நந்தன் கால்வாயை, தென்பெண்ணையாற்றுடன் இணைக்கும் திட்டத்தினை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

சிப்காட், சிட்கோ திட்டங்கள்

சிப்காட், சிட்கோ திட்டங்கள்

தமிழக வளர்ச்சிக்கு சிப்காட், சிட்கோ போன்ற திட்டங்கள் தேவைதான். விவசாயிகளின் விலை நிலங்கள் மற்றும் காடுகளை அழித்து விட்டு, அந்த பகுதிகளில் சிப்காட் மற்றும் சிட்கோ திட்டங்களை கொண்டு வருவதும், 8 வழிச்சாலை திட்டங்களை கொண்டு வருவதும், ஒன்றை அழித்துவிட்டு மற்றொன்றை கொண்டு வருவது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் தற்போது விடுமுறை மற்றும் விழா காலங்கள் என்பதால். ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆம்னி பேருந்து கட்டணம், விமான கட்டணத்தை விட அதிகமாக உள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை

ஆன்லைன் ரம்மி தடை

மின்கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும். மாதம் மாதம் மின்கட்டண கணக்கெடுப்பினை தமிழக அரசு நடைமுறை படுத்த வேண்டும். இது தேர்தல் அறிக்கையில் தமிழக அரசு வாக்குறுதியாக அளித்துள்ளது. ஆன்லைன் ரம்மி தடை செய்யும் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரிக்கிறோம். இதற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். கடந்த காலங்களில் 80 நபர்களும், இந்தாண்டில் மட்டும் 28 நபர்களும் ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

போதைப் பொருட்கள்

போதைப் பொருட்கள்

கஞ்சா, அபின் ஆகிய போதை பொருட்டகள் பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் இருக்கிறது. இதற்காக போதை ஒழிப்பு துறையில் போதுமான காவல்துறையினரை நியமிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் மதுவிற்கும், போதைக்கு அடிமையாவதுதான் கடந்த இரண்டு கட்சிகளின் திரவிட மாடல் அரசாக உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்காக ஆர்எஸ்எஸ் மற்றும் விசிக கட்சியின் பேரணிகளுக்கு தடைவித்துள்ளது. காவல்துறை தனது கடமையை செய்துள்ளது.

வெள்ள பெருக்கை தடுக்க வேண்டும்

வெள்ள பெருக்கை தடுக்க வேண்டும்

தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் சென்னை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வெள்ள பெருக்குகளை தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நீர் மேலாண்மை திட்டத்திற்கு ஒரு லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்க்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Anbumani Ramadoss welcomed the government's decision to ban online rummy in Tamil Nadu and urged the Governor to approve it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X