Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐம்பதாண்டு ஏக்கம்.. ஆரணியை அலேக்காக அள்ளிய திமுக! காங்கிரஸுக்கு 'டேக் டைவர்சன்'.. காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வெளியாகியுள்ளது. இதில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆரணி தொகுதியை, காங்கிரசுக்கு இந்த முறை திமுக ஒதுக்கவில்லை. இந்நிலையில் இதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களையும், வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

These are the reasons why Congress gave up Arani Lok Sabha seat to DMK

திமுக கூட்டணியில் களமிறங்கும் காங்கிரஸ், போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகளில் கட்சி போட்டியிடுகிறது. கடந்த முறை ஆரணி, தேனி, திருச்சி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்தமுறை அதை விட்டுக்கொடுத்திருக்கிறது.

இந்த மூன்று தொகுதிகளை விட்டுக்கொடுத்ததற்கு பல்வேறு காரணங்களை அரசியல் விமர்சகர்கள் அடுக்கியுள்ளனர். குறிப்பாக ஆரணி தொகுதியை திமுக கறாராக கேட்டு பெற்றதாக சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த நாடாளுமன்ற தொகுதி, இதற்கு முன்னர் வந்தவாசி தொகுதி என்று அழைக்கப்பட்டது.

வந்தவாசி தொகுதி 1962ம் ஆண்டு தொடங்கி 2004ம் ஆண்டு வரை 12 லோக்சபா தேர்தலை சந்தித்திருக்கிறது. இதில் 1962, 1980, 1984,1989 மற்றும் 1911 என 5 முறை காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக திமுக 2 முறை ஜெயித்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் நிறுவனரான ஜி.விஸ்வநாதன் தான் 1967 மற்றும் 1971 என இரண்டு தேர்தலிலும் திமுக வேட்பாளராக நின்று வெற்றிபெற்றிருக்கிறார்.

2004ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் வந்தவாசி தொகுதி கலைக்கப்பட்டு, ஆரணி தொகுதியாக மாற்றப்பட்டது. இருப்பினும் திமுக 1971க்கு பிறகு இங்கு வெற்றிபெறவே இல்லை. கிட்டத்தட்ட 53 ஆண்டுகள், அரை நூற்றாண்டு காலமாக இந்த தொகுதியில் திமுக வெற்றிபெறாதது, கட்சி தொண்டர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் ஆரணி தொகுதியின் நிர்வாகிகளுடன் திமுக தலைமை, அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஆலோசனையை மேற்கொண்டிருந்தது. அப்போது தொண்டர்கள் தங்களது சலிப்பை, "கூட்டணி கட்சிகளுக்கு ஆரணி தொகுதி ஒதுக்கக்கூடாது" என எதிர்ப்பாக தெரிவித்தனர். மீறி ஒதுக்கினால் வேலை செய்ய தயாராக இல்லையென்றும் உடைத்து பேசினர். இந்த விவகாரத்தை தலைமை சற்று சீரியஸாகவே அணுகியது.

மறுபுறம் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் குறித்த சர்வே ரிசல்ட்டிலும், ஆரணி எம்பி எம்.கே.விஷ்ணு பிரசாத் குறித்து சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை. எனவே வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைமை காங்கிரஸை கேட்டுக்கொண்டதாகவும், இல்லையெனில் தொகுதியை விட்டுக்கொடுத்துவிடுங்கள் என்று கறாராக கூறியதாகவும் அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே வேறு வழியின்றி ஆரணி தொகுதியை காங்கிரஸ் விட்டுக்கொடுத்திருக்கிறது. 53 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரணி தொகுதியில் திமுகவுக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருப்பதால் உடன்பிறப்புகள் குஷியாகியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+