திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா.. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்.. காவல்துறை விளக்கம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் காவல்துறை தரப்பில் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வினை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.
தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இலவச மினி பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில்,திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பிரத்யேக ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து சீர் செய்ய 14,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர், மேலும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் படைத்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் பின்வரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* குற்றச் செயல்களை கண்காணிக்க 10 ட்ரோன் கேமராக்கள்.
* திருட்டு, கொள்ளை குறித்து 10 இடங்களில் LED Screen மூலம் விழிப்புணர்வு காணொளி.
* தலைமையக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க 19 இடங்களில் 50 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* தகவல் தொடர்பினை மேம்படுத்த கூடுதலாக 4 செல்போன் டவர்கள் மற்றும் 7 Mobile Interceptor வாகனங்கள்.
*பக்தர்களின் சேவைகளுக்காக காவலர்கள் எளிதில் புலப்பட 50 இடங்களில் 4 அடி உயரம் கொண்ட உயர் மேடைகள்.
*கார்களை நிறுத்துமிடம் குறித்து அறிய Push Message வசதி.
தீபத் திருவிழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை கருத்தில்கொண்டு கீழ் காணும்படி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் சாலை:- திருவண்ணாமலை வேலூர் சாலையானது ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டு வேலூர், ஆரணி, ஆற்காடு, திருத்தணி ஆகிய வழித்தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை தீபம் நகர் ரிங் ரோட்டிலிருந்து அரசு மருத்துவக்கல்லூரி, அவலூர்பேட்டை ரிங்ரோடு ஜங்சன். ரயில்வே கேட் வழியாக அண்ணாஆர்ச் தற்காலிக பேருந்து நிலையம் வந்துசேரும். அண்ணாஆர்ச் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருத்தணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் தென்றல்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீபம்நகர் வழியாக செல்லும்.
அவலூர்பேட்டை சாலை: காஞ்சிபுரம், வந்தவாசி, அவலூர்பேட்டை, சேத்பட்டு ஆகிய வழித் தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை ரிங்ரோடு முன்பு SRGDS பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்,
திண்டிவனம் சாலை: சென்னை, புதுச்சேரி, செஞ்சி ஆகிய வழித் தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை மார்க்கெட்டிங் கமிட்டி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும், இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள பேருந்துகள் ரிங்ரோட்டில் உள்ள ஆறுமுகநார் நகர் காலி இடத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்க்கு வந்து செல்லும்,
வேட்டவலம் சாலை:- வேட்டவலம், விழுப்புரம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை ரிங்ரோடு ஏந்தல் கிராமத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.
திருக்கோவிலூர் சாலை:- திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், கும்பகோணம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வந்து சேரும். பேருந்துகள் அதிகப்படியாகும் பொழுது நெய்வேலி. கடலூர், சிதம்பரம். கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் வழித்தடப் பேருந்துகள் அருணை மருத்துவக்கல்லூரி எதிரில் உள்ள மைதானத்திற்கு அனுப்பப்படும்.
மணலூர்பேட்டை, தண்டராம்பட்டு சாலை:- கள்ளக்குறிச்சி, அருர், சேலம், தண்டராம்பட்டு ஆகிய ஊர்களிலிருந்து தண்டராம்பட்டு சாலை வழியாக வரும் பேருந்துகள் தேனிமலை அங்காள பரமேஸ்வரி கோவில் வழியாக மணலூர்பேட்டை சாலையில் சென்று SK steel எதிரில் உள்ள (காலி இடம்) தற்காலிக பேருந்துநிலையத்திற்கு வந்து சேரும். பின்னர் மணலூர்பேட்டை சாலையில் உள்ள ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி தண்டராம்பட்டு சாலையை அடைந்து தங்களது ஊர்களுக்கு செல்லும்.
தியாகதுருகம். மணலூர்பேட்டை ஆகிய ஊர்கள் வழியாக வரும் பேருந்துகள்மணலூர்பேட்டை சாலையில் திருவண்ணாமலை அருகில் உள்ள ரவுண்டானாவில் இடதுபுறம் திரும்பி மம்மிடாடி திருமண மண்டபத்தின் வலது புறம் திரும்பி தேனிமலை அங்காளபரமேஸ்வரி கோவில் வழியாக மணலூர்பேட்டை சாலையில் சென்று SK Steel எதிரில் உள்ள (காலிஇடம்) தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்துசேரும். பின்னர், காட்டாம் பூண்டி மற்றும் மணலூர் பேட்டை வழியாக தங்களின் ஊர்களுக்கு செல்லும்
செங்கம்சாலை:- பெங்களூர், ஓசூர் கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, குப்பம், KGF ஆகிய வழித்தட பேருந்துகள் கிரிவலப்பதை அருகில் உள்ள அத்தியந்தல் தற்கலிக பேருந்து நிலையத்திற்க்கு வந்து செல்லும், பேருந்துகள் அதிகமாகும் போது அருகில் உள்ள கங்கையம்மன் கோவில் (காலியிடம்) மற்றும் சுபிக்ஷா கார்டன் அருகி தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். தேவைப்படும் பொழுது அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அனுப்பப்படும்.
காஞ்சி சாலை:- புதுப்பாளையம், காஞ்சி, கடலாடி, மேல்சோழங்குப்பம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆடையூர் Don Bosco சிகரம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்.
திருவண்ணாமலை நகரத்தை சுற்றியுள்ள கார் நிறுத்தும் இடங்களை எளிதில் கண்டறிய https://tvmpolicedeepam2023.com என்ற வலைத்தளத்தையும் மேலும் காவல் அவசர உதவிக்கு 044- 28447703, 044 28447701 மற்றும் 8939686742 ஆகிய எண்களையும் காணாமல் போவது சம்மந்தமான உதவிக்கு 9342116232 8438208003 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications