திருவண்ணாமலை போறீங்களா? பெங்களூர் ரோட்டில் அந்த "உருவம்".. 6 மணிக்கு தினமும் வருதாமே.. பார்த்தீங்களா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை சாலையில் தொடர் விபத்துக்கள் நடந்து வரும்நிலையில், அம்மாவட்ட மக்களை ஒருவித கலக்கமும், பயமும் சூழ்ந்து வருகிறது. என்ன காரணம்?
திருவண்ணாமலை அருகே விபத்தில் 15 பேர் பரிதாபமாக இறந்த இடத்தில் பேய் நடமாடுவதாக மக்கள் வெளியே வராமல் முடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெங்களூர் செல்லும் சாலையில் நடந்த விபத்துக்கள், தமிழகத்தையே நிலைகுலைய வைத்துவிட்டன. அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே, கடந்த 15ம் தேதி, மேல்மலையனூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது, அந்த கார் விபத்தில் சிக்கிவிட்டது. அதில் குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் நசுங்கி உயிரிழந்துவிட்டனர்.
பலிகள்: இதையடுத்து, அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில், கடந்த 23-ம் தேதி இரவு மீண்டும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 8 பேர் பலியானார்கள்... விபத்து நடந்த பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாக தற்போது, திடீர் தகவல் வெளியாகி வருகிறது.
அதாவது, விபத்து நடந்த இடத்தில், சில வருடங்களுக்கு முன்பு, விவசாய பண்ணை இருந்திருக்கிறது. இப்போது, அந்த பண்ணை செயல்படாமலும் உள்ளது.. எனவே, அந்த பகுதியே, அடர்ந்த காடு போல காணப்படுகிறது. சாலையில் அடர்ந்த தைலம் மரங்கள், கருவேல மரங்கள், நிறைய உள்ளதால், சாயங்காலம் வெகுசீக்கிரத்திலேயே அங்கு இருட்டிவிடுகிறதாம்.
பறவைகள் அலறல்: சாயங்காலம் 6 ஆகிவிட்டால், காற்று வேகமாக வீசுகிறதாம். அதுவும் சுழல் காற்று வீசுகிறது.. நாய்கள் நிறைய சுற்றி சுற்றி வருகின்றனவாம்.. பறவைகள் அலறல் காதைக் கிழிக்கிறதாம். சாலைகளில் பனி படர்ந்து மூடிக்கொள்கிறதாம். சாலையின் குறுக்கே வெள்ளை கலரிலும், கருப்பு கலரிலும் மர்ம உருவங்கள் நடமாடுகிறதாம்.. விபத்தில் உயிரிழந்த அந்த 15 பேர்தான், இப்படி ஆவியாக நடமாடுவதாக, அந்த பகுதி மக்கள் பீதியில் சொல்கிறார்களாம்.
இந்த சாலையை கடந்துதான், ஒயின்ஷாப்புக்கு செல்ல வேண்டும் என்பதால், குடிமகன்கள் டாஸ்மாக் கடைக்கு போகவே இல்லையாம். இதனால் டாஸ்மாக் உள்பட அங்கிருக்கும் கடைகளில் கூட்டமே இல்லாமல் காணப்படுகிறது.
முன்பெல்லாம் கருமாங்குளத்திலுள்ள டாஸ்மாக் கடை மற்றும் நள்ளிரவு, 12:00 மணிவரை இருக்குமாம். இப்போது யாருமே அங்கு போவதில்லை என்றும், வெளியூர்க்காரர்கள் மட்டும் விஷயம் தெரியாமல், டாஸ்மாக் வந்து செல்வதாகவும் கூறுகிறார்கள்.
சாலைகள்: அந்த பகுதி மக்கள், 6 மணி ஆகிவிட்டாலே, விபத்து சாலையில் செல்ல பயப்படுகிறார்களாம்.. வீட்டில் வாசப்படியில் வேப்பிலையை கட்டி வைத்து கொள்கிறார்களாம். வீட்டிலேயே விளக்கேற்றி சாமி கும்பிடுகிறார்களாம். வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டுகின்றனர். 6 மணிக்கே வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடுகின்றனர்.
கடந்த வருடம், இதே திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் செய்யாற்றின் கரையோரம், பேய் இருப்பதாக சொல்லி, அரசு குடியிருப்பில் அதிகாரிகள் தங்குவதில்லை என்றும், இந்த குடியிருப்பை புறக்கணித்துவிட்டு வெளியேறிவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
குடியிருப்புகள்: கடந்த 11 வருடங்களில், 14 தாசில்தார்கள் பணிபுரிந்து வந்தாலும், எந்த ஒரு தாசில்தாரும் அந்த குடியிருப்பில் வசிக்கவில்லையாம். நடுராத்திரியில் ஏதோ உருவம் நடமாடுகிறதாம்.. பேய்கள் குறுக்குமறுக்குமாக நடக்கிறதாம். அதிகாரிகளுக்கு என்றைக்காவது அதிகமான வேலை காரணமாக, நள்ளிரவு ஆகிவிட்டால்கூட, இந்த பங்களா பக்கம் வருவது கிடையாதாம். எவ்வளவு நேரம் ஆனாலும், அவங்கவங்க வீட்டுக்கே போய்விடுவார்களாம்.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சுடுகாடு இருக்கிறதாம். அங்கிருந்து இந்த குடியிருப்புவரை, அமாவாசை நாட்களில் மட்டும் பேய்கள் வந்து வந்து போகும் என்று அதிர்ச்சி விலகாமல் சொன்னார்கள் அந்த பகுதி மக்கள்.. இப்போது, பெங்களூரு ஹைவேஸில், பேய் நடமாடுவதாக பகீர் கிளம்பி உள்ளது.
மாவட்ட நிர்வாகம்: நிஜமாவே, இந்த சாலையில் வெள்ளை, கறுப்பு உருவங்கள் நடமாடுகிறதா? பேய் இருக்கிறதா? இல்லையா? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், மக்களின் இந்த பயத்தை பயன்படுத்தி, நிறைய சமூகவிரோத செயல்கள் சாலைகளில் நடக்க நிறையவே வாய்ப்புள்ளதால், சம்பவ இடத்தில் ஒளிரும் விளக்குகளை பொருத்தி, பொதுமக்களின் அச்சத்தை மாவட்ட நிர்வாகம் போக்கினால் நன்றாக இருக்கும்...!!
மாவட்ட நிர்வாகம்: இந்த சாலையில் வெள்ளை, கறுப்பு உருவங்கள் நடமாடுகிறதா? பேய் இருக்கிறதா? இல்லையா? என்றெல்லாம் தெரியவில்லை. இப்படியான கட்டுக்கதைகளை யார் கிளப்பி விட்டு வருகிறார்கள் என்றும் தெரியவில்லை.. மழைக்காலத்தில் சீக்கிரமாகவே இருட்டிவிடும்.. அத்துடன், சாயங்கால நேரங்களில் பறவைகள் கிரீச்சிட்டு கூடுகளுக்கு திரும்புவது இயல்பான விஷயம்தான்.
எனினும், அப்பகுதி மக்களின், இந்த பயத்தை பயன்படுத்தி, நிறைய சமூகவிரோத செயல்கள் அந்த சாலைகளில் நடக்க நிறையவே வாய்ப்புள்ளது.. எனவே, சம்பவ இடத்தில் வேகத்தடைகளை அமைத்து, ஒளிரும் விளக்குகளையும் பொருத்தி, பொதுமக்களின் அச்சத்தை மாவட்ட நிர்வாகம் போக்கினால் நன்றாக இருக்கும்...!!












Click it and Unblock the Notifications