திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவண்ணாமலை மலை மீது ஒளிதரும் தீபம் - சாமி தரிசனம் செய்து வேண்டிக்கொண்ட துர்கா ஸ்டாலின்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வேண்டிக்கொண்டார். கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. துர்கா ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தனது கணவர் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்று அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சென்று வேண்டுதல் வைத்தார். திருச்செந்தூர் முதல் திருப்பதி வரை சென்று சாமி தரிசனம் செய்து வேண்டிக்கொண்டார் துர்கா ஸ்டாலின்.

 சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா - இருமுடி தத்துவம் சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா - இருமுடி தத்துவம்

சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முதல்வரின் இல்லத்திற்கு வந்து ஆலயத்தின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் வேத பண்டிதர்கள் முதல்வர் வீட்டிற்கு வந்தனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கோவில்கள் மூடப்பட்டதால் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன.

வேண்டுதல் நிறைவேற்றம்

வேண்டுதல் நிறைவேற்றம்

கணவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற தனது வேண்டுதல் நிறைவேறி விட்டதால் அனைத்து கோவில்களுக்கும் சென்று வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் துர்கா ஸ்டாலின். திருப்பதி, திருச்செந்தூர், திருவண்ணாமலை என பல கோவில்களுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்து சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்றார்.

சிறப்பு அபிஷேகம்

சிறப்பு அபிஷேகம்

அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனை சிறப்பு வழிபாடுகள் செய்து, சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

கார்த்திகையில் தீப தரிசனம்

கார்த்திகையில் தீப தரிசனம்

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு அதனை தொடர்ந்து அன்று மாலை கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீப திருவிழாவிற்கு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தீப தரிசனம்

தீப தரிசனம்

மகா தீபத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்போது உற்சவம் நடைபெற்று வருகிறது. தீப திருவிழாவை முன்னிட்டு மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் வரை எரிந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் அண்ணாமலையாரையும் மலைமீது ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபத்தையும் தரிசனம் செய்திருக்கிறார் துர்கா ஸ்டாலின்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன்

திருவொற்றியூர் வடிவுடையம்மன்

கடந்த சனிக்கிழமையன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார் துர்கா ஸ்டாலின். ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு வடிவுடையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அதன் அருகில் உள்ள தட்சிணாமூர்த்தி திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டார் துர்கா ஸ்டாலின். தமிழகம் முழுவதும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் கோவிலாக சென்று வரும் துர்கா ஸ்டாலின் வட இந்தியாவில் உள்ள சிவ ஆலயங்களுக்கும் செல்லப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Chief Minister MK Stalin's wife Durga Thiruvannamalai Sami darshan at the Annamalaiyar temple and prayed. She was greeted and honoured by the temple administration. Durga Stalin used to visit important temples all over Tamil Nadu and pay obeisance to Swami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X