கரும்பு தோட்டத்தில்.. ஆடையின்றி பரிதாப பெண்.. ஹைவேஸில் பெட்ரோல் பங்க்.. பரபர திருவண்ணாமலை ராதாபுரம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: கரும்பு தோட்டத்துக்குள் யார் அந்த பெண் என்று தெரியவில்லை.. ஆனால், வெளியூராக இருக்கலாம் என்கிறார்கள்.. போலீசாரும் அந்த பரிதாப பெண் குறித்த விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ளது ராதாபுரம்.. இங்கு வசித்து வருபவர் பழனிவேல்.. இவர் ஒரு விவசாயி... எனவே, இவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார்..

Tiruvannamalai Heart Breaking incident in Radhapuram and Do you know who is this woman in Sugarcane Plantation

கரும்பு அறுவடை: இந்த கரும்பு அறுவடைக்கு தயாராகிவிட்டது. எனவே, அறுவடை பணிகளும் கடந்த சில நாட்களாகவே இங்கு நடந்து கொண்டிருக்கிறது.. கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கரும்பு தோட்டத்தில் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் கரும்பு தோட்டத்திற்குள் அறுவடை பணிக்காக நுழைந்தனர்.. அப்போது தோட்டத்தில் குப்பென்ற நாற்றம் வந்துள்ளது.. இதனால், அதிர்ச்சியும், சந்தேகமும் அடைந்த தொழிலாளர்கள், கரும்பு தோட்டத்திற்குள் சென்று பார்த்தனர்.. அப்போது தோட்டத்தின் மையப்பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.

அழுகிய சடலம்: அந்த பெண் நிர்வாணமாக கிடந்தார்.. சடலம் மொத்தமும் அழுகிய நிலையில் கிடந்தது.. இதைப்பார்த்து பதறிப்போன தொழிலாளர்கள், உடனடியாக நிலத்தின் ஓனர் பழனிவே அழுகிய சடலம்: லுக்கு விஷயத்தை சொன்னார்கள்..

உடனே பழனிவேல், அந்த கிராமத்தின் விஏஓ ஆனந்தனுக்கு தகவல் தந்தார்.. இதையடுத்து விஏஓ உட்பட தண்டராம்பட்டு போலீஸார், ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தனர்.. பெண்ணின் சடலத்தையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை: உடனடியாக விசாரணையையும் துவங்கியிருக்கிறார்கள். உயிரிழந்த பெண்ணிற்கு 30 வயதிருக்குமாம்.. ஆனால், அவர் யார் என்று தெரியவில்லை.. இநத் ஊரை சேர்ந்தவர் இல்லையாம்.. வெளியூரிலிருந்து வந்திருக்கலாம்? அல்லது யாராவது அவரை வாகனத்தில் இங்கு கடத்தி வந்து பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம்? என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்..

காரணம், இந்த கரும்பு தோட்டத்துக்கு பக்கத்திலேயே, திருவண்ணாமலை-அரூர் இடையேயான 4 வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில்தான், இந்த கரும்பு தோட்டம் உள்ளது.

ஹைவேஸ்: இளம்பெண் நிர்வாண நிலையில் சடலமாக கிடப்பதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.. அதனால், மிகத்தீவிரமாக கொலையாளிகளை தேடி வருகிறார்கள்..

இது ஹைவேஸ் என்பதால், அருகிலேயே பெட்ரோல் பங்க் உள்ளது.. எனவே இங்கிருக்கும் சிசிடிவியில், கடந்த சில வாரங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

இதே ஹைவேஸில், சில தனியார் கடைகளும் உள்ளன.. இந்த கடைகளிலும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதால், அனைத்தையுமே போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+