திருவண்ணாமலை கோயில் சர்ப்ரைஸ்.. சித்ரா பவுர்ணமியில் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்.. ஸ்பெஷல் பஸ்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியையொட்டி லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்றனர்... நேற்றிரவு 8.47 மணிக்கு தொடங்கிய சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது. இதனையொட்டி, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது... சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பஸ்களும் நாளை வரை அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். அதாவது, 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.. அதனால்தான், திருவண்ணாமலையின் வயதை 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிடுகிறார்கள்.

இந்த அண்ணாமலையார் கோயிலானது 24 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.. நடுநாட்டு தலங்களுள் முதன்மையானது இந்த திருவண்ணாமலை கோயில் என்கிறார்கள்.. பஞ்சபூதத் தலங்களுள் இதனை அக்னித் தலம் என்றும், நால்வராலும் பாடப்பட்ட தலம் என்றும் போற்றப்படுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான தம்பதியினர் இந்த கோயிலுக்கு வருகை தருவார்கள்..
சித்ரா பவுர்ணமி
தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட்டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பதாகவும் பிரார்த்தி கொள்வார்கள்.
அதேபோல, கிரிவலம் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்வது வழக்கமாகும்.. அதாவது, திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்..
பக்தர்கள் கிரிவலம்
பௌர்ணமி நாளில் மிகவும் விசேஷம் என்பதால், 14 கிலோ மீட்டர் அளவுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்து அருணாச்சலேஸ்வரரை பக்தர்கள் வணங்குவார்கள்.
அந்தவகையில், இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நேற்றிரவு சுமார் 8.53 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தரகள் குவிய தொடங்கிவிட்டார்கள்.. பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து, கிரிவலமும் மேற்கொண்டனர்.. சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று வருகிறார்கள்.
வாகனங்களுக்கு தடை
சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அரசு பஸ்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கார், சிறிய ரக வாகனங்கள், அரசு பஸ்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
மற்றபடி கனரக வாகனங்கள், திருவண்ணாமலை நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரி உள்ளிட்ட அனைத்து வகை லாரிகளுக்கும் போளூர் புறவழிச் சாலையில், செங்கம், கலசப்பாக்கம் உள்ளிட்ட மாற்றுச் சாலைகளின் வழியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. கடந்த 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதாவது, கும்பகோணத்தில் இருந்து 145 பஸ்கள், திருச்சி, துறையூர், பெரம்பலூரில் இருந்து 190 பஸ்கள், அரியலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து 58 பஸ்கள், மயிலாடுதுறையில் இருந்து 65 பஸ்கள், நாகப்பட்டினத்தில் இருந்து 50 பஸ்கள், காரைக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து 48 பஸ்கள், புதுக்கோட்டையில் இருந்து 51 பஸ்கள் என மொத்தம் 607 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன. மேலும், கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட உள்ளன
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications